தங்கத்தின் விலை தினசரியும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று (நவ. 29) ரூ. 57,280 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஒரு சவரன் தங்கம் 60,000 ரூபாயை தொட உள்ளதால் நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்று பொருளாதார நிபுணர்கள் சொல்வதை பார்க்கலாம்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்களால் ஒரு குண்டு மணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதால் விலை தடாலடியாக குறைந்தது.
இதனால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். ஆனால் மீண்டும் தங்கம் மளமளவென எகிறியது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து தங்கம் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. அதிலும் சில நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்தது.
இந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை(Gold Price Today) இன்று (நவ. 28) எகிறியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 அதிகரித்து ரூ. 7,160க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 57,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ரூ. 2 அதிகரித்து ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பண்டிகை காலம் மற்றும் சுப முகூர்த்த காலங்கள் என்பதால் நகை வாங்க காத்திருந்த மக்கள் தங்கம் விலை உயர்வால் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா? அல்லது மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.