தமிழ்நாடு

ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு.. சிபிஎஸ்இ புதிய வரைவு அறிக்கை

பிப்ரவரியில் எழுதும் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணில் மனநிறைவு கொண்டால் மே மாதம் நடத்தப்படும் தேர்வை அவர்கள் எழுத வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மதிப்பெண்களை உயர்த்த மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு.. சிபிஎஸ்இ புதிய வரைவு அறிக்கை
சிபிஎஸ்இ புதிய வரைவு அறிக்கை

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பொது தேர்வு நடைமுறையே சிபிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி புதிய பொது தேர்வு விதிமுறை என்பது மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்வதற்கும், மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கவும், மாணவர்கள் பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவும், மனப்பாடம் செய்வதை தடுக்கவும் புதிய தேர்வு முறை வழி வகுப்பதாக வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஒரு பொதுத் தேர்வை எழுதலாம் விரும்பினால் இரண்டாம் முறையும் பொது தேர்வை எதிர்கொள்ளலாம். முதற்கட்ட தேர்வு பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பொது தேர்வு மே 5-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. அறிவியல், கணிதம், சமூக அறிவியல், இந்தி, ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளை நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வொரு நாள் தேதியிலும் மாணவர்கள் எழுத வேண்டும்.

மாணவர்கள் தேர்வு செய்யும் விருப்ப பாடங்களை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தேர்வினை எழுத புதிய விதிமுறை அனுமதிக்கிறது. அதேபோன்று அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள் எளிது மற்றும் கடினம் என இரண்டு வகைகளாக பிரிக்கப்படும். அதில் விரும்பும் வினாத்தாளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதில் கடினமான வினாத்தாளை தேர்வு செய்யும் மாணவர்கள் மட்டுமே குறிப்பிட்ட பாடங்கள் சார்ந்த பிரிவில் பட்டப் படிப்புகள் மற்றும் தொடர்புடைய பிற உயர்கல்வி பிரிவுகளை பயில முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழ் என்பது இரண்டாம் கட்ட தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற  மதிப்பெண் இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும். முதற்கட்ட பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பதினோராம் வகுப்பில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்படும் மானவர்கள் மீண்டும் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

முதற்கட்ட பொதுத்தேர்வில் பிரதான பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூலை மாதம் நடத்தப்படக் கூடிய சிறப்பு பொது தேர்வில் பங்கேற்று தேர்வினை எழுதவும் அனுமதிக்கப்படுவார்கள் என புதிய வரைவு அறிக்கையில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.