மாணவிகளிடம் சில்மிஷம்.. ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!.. கல்வி சான்றிதழ் ரத்து
பள்ளி மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு மற்றும் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவியர்களிடம் ஒழுக்கக் கேடான முறையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஓய்வு (Compulsory Retirement), பணி நீக்கம் (Removal), பணியறவு (Dismissal), மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிச்சாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு (Student Safeguarding Advisory Committee) ஆணையிடப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் அனுப்பப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு தொடர்பான தகவல்களை அனைத்து மாணவர்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்கி கூறுதல் வேண்டும்.
மாணவர் மனசுப் பெட்டி, 14417 மற்றும் 10980 ஆகிய தொடர்பு எண்கள், மாணவிகள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் NSS, NCC, Scout Guide, JRC போன்ற அமைப்புகள் பள்ளிகளின் செயல்படுத்துவதற்கு முறையான அனுமதி பெற்றிருத்தல் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நடத்துதல் சார்ந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (POCSO) சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையத்தால் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியிடப்பட்ட YOUTUBE video-aso பள்ளியில் காண்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்களால் பள்ளி முதல்வர்களுக்கு நடத்தப்படும் மாதாந்திரக் கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் POCSO சட்டம் குறித்தும் பள்ளி முதல்வர்கள் மூலமாக ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?