எல்லாத்தையும் மூடிட்டு கள்ளு கடை போடுங்க! - நயினார் நாகேந்திரன் பகீர்

தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட்டு கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Sep 12, 2024 - 20:48
 0
எல்லாத்தையும் மூடிட்டு கள்ளு கடை போடுங்க! - நயினார் நாகேந்திரன் பகீர்
எல்லாத்தையும் மூடிட்டு கள்ளு கடை போடுங்க! - நயினார் நாகேந்திரன் பகீர்

சென்னை அடுத்த தாம்பரத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மெட்ரோ ரயில் திட்டத்தில் இதற்கு முன்பு கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசின் பங்கு இருக்கிறது. தற்போது இருக்கக்கூடிய திட்டங்களுக்கு இனிமேல் அதற்கான நிதியை ஒதுக்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஒரு ரூபாய் கூட வரவில்லை என சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மத்திய போக்குவரத்து துறையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 12 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்காக மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதிதான் மத்திய அரசு இந்த போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தியது. மத்திய அரசு எந்த பாகுபாடும் இன்றி தமிழ்நாட்டுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் நிச்சயமாக பெற்றுத் தரும்.

இந்த நாடு சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி தொடங்கி அந்த கட்சி நன்றாக வர வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் எண்ணமாக இருக்கும். இதில் புதிதாக கட்சியை தொடங்கியுள்ள விஜய் மாநாடு நடத்த வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு அனுமதி தருவதற்கு காலதாமதம் மற்றும் ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு நியாயமாக நடந்து கொண்டு சுதந்திரம் கொடுத்து அவர்களை அந்த மாநாட்டை நடத்த விட்டிருந்தால் இதுபோன்று பிரச்சனைகள் வந்திருக்காது. 

இந்துக்கள் ஜாதியால் பிரிந்து இருக்கிறார்கள். மைனாரிட்டி மக்களின் வாக்கு வேண்டும் என்பதற்காக பசுத்தோல் போர்த்திய புலியாகத்தான் இன்று அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகிறது. இப்படி இருந்தால் நம் நாடு முன்னேற்றம் அடையாது. 

மேலும் படிக்க: செப்டம்பர் 2024 ஏகாதசி: செல்வம் செழிக்க வாழ்வதற்கு உதவும் விரதம்!

மதுவிலக்கு வேண்டும் என்பதில் பாரதிய ஜனதாவிற்கு மாற்று கருத்து கிடையாது. பாஜகவை பொறுத்தவரை மது குடித்து பல பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் கள்ளக்குறிச்சியில் இது போன்ற சம்பவம் நடக்கிறது. எங்களை பொறுத்தவரை இவை அனைத்தையும் மூடிவிட்டு கள்ளு கடையை திறக்க வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை" என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow