Audio Leak ; எப்பேர்பட்ட கொம்பன் வந்தாலும்.. மணல் மாஃபியாவிடம் போலிஸ் ஏஜெண்ட் டீலிங்க்..

Arani Sand Mafia with Police Agent Audio Leaked : ஆரணியில் மணல் மாபியாக்களிடம் போலீஸ் ஏஜென்ட், ஆட்டோ டிரைவரின் உரையாடல் சமூக வளைதலங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Aug 12, 2024 - 16:26
Aug 13, 2024 - 15:07
 0
Audio Leak ; எப்பேர்பட்ட கொம்பன் வந்தாலும்.. மணல் மாஃபியாவிடம் போலிஸ் ஏஜெண்ட் டீலிங்க்..
மணல் மாஃபியாவிடம் பேசும் போலீஸ் ஏஜெண்ட்

Arani Sand Mafia with Police Agent Audio Leaked : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் எதிரில் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜங்கம் என்பவரும் காவல் உதவி ஆய்வாளராக அருண் என்பவரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக கன்ராயன், மீனாட்சிசுந்தரம், ஜெயபால் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் காவல்நிலைய போலீசாருக்கு ஏஜென்டாக(Police Agent) ஆரணி அருகே பையூர் ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முருகன், ஆரணி கிராமிய காவல்நிலையத்தில் போலீசாருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். போலீசாரின் துணையாக வேலைகளை செய்து வருவதால், மணல் மாபியாக்கள் மற்றும் சாராய வியாபாரிகள் மற்றும் சட்ட விரோதம் செயலில் ஈடுபடும் நபர்களிடம் நன்கு அறிமுகமாகி பழகி வந்துள்ளார்.

இதனையொடுத்து மணல் மாபியாவிடம்(Sand Mafia) ஆட்டோ ஓட்டுனர் முருகன்,  எஸ்.எஸ்.ஐ ஒருவரை பற்றி தரகுறைவாக பேசுவதும் மணல் வாகனம் சிக்கியது. போலீசாருக்கு 10ஆயிரம் வரையில் பணம் கொடுக்க தயாராக இருந்தோம், ஆனால் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததாக ஆடியோவில் மணல் மாபியா கூறும்போது. போலீஸ் ஏஜென்ட் ஆட்டோ முருகன், என்னிடம் கூறினால் வண்டியை முடித்து கொடுத்துருப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இன்ஸ்பெக்டர் நல்லவரா கெட்டவரா என தெரியவில்லை. கைநீட்டி காசு வாங்கி விட்டால் எப்பேர்பட்ட கொம்பன் வந்தாலும் காப்பாற்றுவார். நேற்று கூட ஸ்டேஷனுக்கு சென்றபோது என்ன முருகா இந்த பக்கம் வராமாட்டேன் என்கிறாய் என கேட்டார்’ என சகஜமாக மணல் மாபியாவிடம் போலீஸ் ஏஜென்ட் ஆட்டோ முருகன் பேசும் ஆடியோ வெளியாகியது.

தற்போது இந்த ஆடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் மத்தியில் பெரும் கலகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது புதியதாக பதவி ஏற்று இருக்கும் மாவட்ட கண்காணிப்பாளர் பிரபாகர் யார் மீது நடவடிக்கை எடுப்பார் என்ற கோணத்தில் போலீசார் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow