கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் காணாமலே போய்விடுவார் என்று ஊடகங்களாலும், அரசியல் சாணக்கியர்களாலும் விமர்சிக்கப்பட்ட விஜய், இந்தியாவே வியக்கும்படி மே பத்தாம் தேதி முதல்வரானார். எதிர்க்கட்சிகள் அசரும்படி ஜூலை பத்தாம் தேதி அதே கரூருக்கு முதல்வராக வந்து, தன்னை விமர்சித்த வர்களைத் தலைகுனிய வைத்து விட்டார்.
வந்தவர் மவுன அஞ்சலியோடு நிறுத்திக் கொள்வார் என்று எதிர் பார்த்த நிலையில், "பணமா ஜனமா என்று கேட்டால், எனக்கு ஜனம்தான் முக்கியம். இனி இப்படி ஓர் அரசியல் சூழ்ச்சியை யாரும் யோசிக்கவே கூடாது..." என்று தில்லா, கெத்தா பன்ச் டயலாக்கெல்லாம் பேசி ஒரு பொலிட்டிகல் புயலையே உருவாக்கி விட்டார்.
அந்தப் புயலின் அடுத்த இலக்கு இரண்டு திராவிடக் கட்சிகளையும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்து வதுதான் என்பதை முதல்வர் விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் இடிபோல் உணர்த்துகிறது..
சில நாட்கள் முன்பு, சிட்டத் தட்ட 60 சதவீத அ.தி.மு.க-வினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டனர். இன்னும் இணைய இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர் மகன் மிதுன் மட்டுமே இருப்பார்கள்' என்று அதிமு.க. நிர்வாகிகள் மெகா இணைப்பு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசினார். அதோடு, 'தி.மு.க.வைப் பொறுத்தவரை ஸ்டாலின்தான் கடைசி முதல்வர். சேர்த்துவைத்த பணத்தை எடுத்துக்கொண்டு உங்கள் குடும்பத்தோடு லண்டனுக்குப் போய் செட்டில் ஆகிவிடுங்கள்! சுரூரில் எங்களுக்குத் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று இருக்கிறது என்று அவர் பேசிய பேச்சும் அதே பாணியில் இருந்தது.
நடக்கிற விஷயங்களைப் பார்த்தால் அ.தி.மு.சு. என்ற கட்சியை ஜோசப் விஜய் அலுங் காமல் குலுங்காமல் மொத்தமாக த.வெ.க-வில் கொண்டுவந்து இணைத்துவிடுவார் போலிருக்கிறது. அதேசமயம், திமுகவை மொத்தமாக ஒடுக்கிவிடுகிற திட்டம் ஜோசப் விஜய் வசம் இருப்பதாகவும் எண்ணத் தோன்றுகிறது. சென்ற வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தந்த புகாரில் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும். அப்போது திமுசுவுக்கு ஆதரவாக பேரவைத் தலைவருக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
உங்களுக்கு 35 கோடி தருகிறோம்' என்று தி.மு.க தரப்பில் பேரம் பேசியதாகச் சொன்னார். 'ஸ்டாலின் சொன்ன ஆட்சி மாற்றம் ரகசியம் இதுதானா?" என்று இந்தச் சம்பவத்தைக் கிண்டல் செய்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஸ்டாலினின் சுயரூபம் இப்போது தெரிகிறது என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள்.
இரண்டு பெரிய கட்சிகளுமே இப்படி பலவீனங்களுக்குள் சிக்கி இருப்பதால்தான், ஜோசப் விஜய் தி.மு.கவை வலது கையால் ஹாண்டில் பண்ணுகிறார், அ.தி.மு.க.வை இடது கையால் ஹாண்டில் பண்ணுகிறார் என்கிறார்கள். அதேசமயம் கூட்டணிக் கட்சித் தலைவர்களைத் தனது தொடர்பு எல்லையில் வைத்திருக்கிறார். கூட்டணித் தலைவர்கள் வாயாலேயே இந்த ஆட்சி ஐந்தாண்டு தொடரும், பத்தாண்டு தொடரும் என்றெல்லாம் பேச வைத்திருக்கிறார், விஜய் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பணி நியமனத்துக்கு ஏழு லட்சம் வாங்கினார். ஆனால், வேலை தரவில்லை' என்ற குற்றச்சாட்டில் அவருக்கு சம்மன் அனுப்பப் பட்டிருக்கிறது. எ.வ.வேலு வீட்டில் சோதனை. ஆஜராகச் சொல்லி அவருக்கு சம்மன். இப்படிப் 'பெட்டி கேஸ்'களில் அமைச்சர்களை சிக்க வைப்பதும் ஓர் அரசியல் வியூகம்தான்!
அத்துடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பேச்சுக்கும் சில சமயம் ஸ்பீட் பிரேக்கர் போடுகிறார் விஜய் எங்க கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யட்டும், அவர்களை நான் ஜெயிக்க வைக்கிறேன் என்று வாக்குறுதி தந்தார் விஜய் என்று வைகோ சொன்னதும் 'நீங்க மூத்த தலைவர்... இப்படி எல்லாம் சர்ச்சையாகப் பேசலாமா? ஜாக்கிரதையாகப் பேசுங்கள்' என்று எச்சரிக்கை செய்தாராம். விஜய் சமீபத்தில் அ.தி.மு.க-வில் இணைந்த இரண்டு விஜய பாஸ்கர்கள் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் அவர்களைச் சேர்த்துக் கொண்டது 'பா.ஜ.க. போலவே விஜய் கட்சியும் ஒரு வாஷிங் மிஷின்' என்ற விமர்சனத்திற்கு உரியதாக இருக்கிறது.
ஆனால், இதைக் காதில் போட்டுக் கொள்ள விஜய் தயாராக இல்லை. தான் நினைப்பதைச் செய்யும் துணிச்சல் விஜய்யிடம் கூடிக்கொண்டே வருவதுதான் அவரின் வியூகத் திற்கான வெற்றியாகவே விமர்சகர் களால் பார்க்கப்படுகிறது.