ஆந்திராவில் நடிகை கஸ்தூரி பதுங்கல்?-தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்

ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

Nov 16, 2024 - 22:31
 0
ஆந்திராவில் நடிகை கஸ்தூரி பதுங்கல்?-தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழகில் நடிகை கஸ்தூரி திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் ஆதரவில் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் சமீபத்தில் நடந்த போராட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர், தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசினார். இது குறித்தான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நடிகை கஸ்தூரி மீது சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும் ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள சில அமைப்புகள் நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து தான் தவறாக பேசவில்லை. தானும் தெலுங்கு மருமகள் தான் என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்னர். அவர் மீது புகார்களும் குவிந்துள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் நடிகை கஸ்தூரி சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டிற்கு சென்று போலீசார் சம்மன் நோட்டீஸ் ஒட்டியதாக கூறப்படுகிறது.கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர் ஐதராபாத்தில் உள்ள வீட்டிற்கு சென்று பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேடினர். ஆனால் அந்த வீட்டையும் பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டது போலீசாருக்கு தெரிய வந்தது. 

இதனால் தனிப்படை போலீசார் ஐதராபாத், ஆந்திராவில் முகாமிட்டு தேடி வருகின்றனர். ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. அவர் யார்? கஸ்தூரி எங்கு பதுங்கி உள்ளார்? என தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.இதற்கிடையில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow