Thalapathy 69: விஜய்யின் கடைசிப் படம்... தளபதி 69 அப்டேட் லோடிங்... கண்கலங்கிய ரசிகர்கள்!

விஜய் நடிக்கவுள்ள கடைசிப் படமான தளபதி 69-ஐ ஹெச் வினோத் இயக்கவுள்ளார். இந்தப் படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Sep 13, 2024 - 23:32
 0
Thalapathy 69: விஜய்யின் கடைசிப் படம்... தளபதி 69 அப்டேட் லோடிங்... கண்கலங்கிய ரசிகர்கள்!
தளபதி 69 அப்டேட்

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான தளபதி விஜய், சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தடம் பதிக்கவுள்ளார். கடந்த வாரம் அவர் நடித்த கோட் திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் கடைசிப் படமான தளபதி 69 ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளது மட்டுமே இதுவரை கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதனால் தளபதி 69 படம் பற்றிய அபிஸியல் அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங்கில் உள்ளனர். 

அதன்படி தளபதி 69 அபிஸியல் அப்டேட் நாளை (செப்.14) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. KVN புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதும் நாளை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், ‘One Last Time’ என்ற கேப்ஷனுடன் விஜய் ரசிகர்களின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது. அதில் விஜய்யை அவரது ரசிகர்கள் எப்படியெல்லாம் ரசித்தார்கள், கொண்டாடினார்கள் என ரொம்பவே எமோஷனலாக பேசியுள்ளனர். அதேபோல், விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது ரசிகர்களை சந்தித்த காட்சிகளும் கிளிம்ப்ஸ்களாக உள்ளன. 

இந்நிலையில், தளபதி 69 படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிம்ரன், மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட நடிகர்களும் கமிட்டாகியுள்ளதாக தெரிகிறது. முன்னதாக தளபதி 69 படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், தற்போதைய தகவல்களின் அடிப்படையில் பூஜா ஹெக்டே நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தளபதி 69 அப்டேட் நாளை வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்காக விஜய் உட்பட ஒட்டுமொத்த தளபதி 69 படக்குழுவும் ரெடியாக உள்ளது. இதனிடையே சசிகுமாரின் நந்தன் பட விழாவில் இயக்குநர் ஹெச் வினோத் பேசியது வைரலாகி வருகிறது. அதில், ”பெரிய பட்ஜெட்டில் எடுப்பதாலோ அல்லது பெரிய ஹீரோக்கள் நடிப்பதாலோ ஒரு படம் நல்ல படமாகிவிடாது. ஒரு மனிதரை நல்லவனாக மாற்ற முயற்சிப்பதே நல்ல சினிமா” எனக் கூறியுள்ளார். அஜித் நடிப்பில் 4 படங்களை இயக்கியுள்ள ஹெச் வினோத், இப்போது விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ளார்.

தொடர்ந்து மாஸ் ஹீரோக்களுடன் பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி வரும் ஹெச் வினோத், இப்படியொரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இன்னொரு பக்கம் நாளை வெளியாகவுள்ள தளபதி 69 அப்டேட்டுக்காகவும் விஜய் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow