தமிழ்நாடு

பல்சர் பைக்கில் வந்து யாசகம்... Tax கட்டாத பணக்காரர்கள் இவர்கள்தான்!

‘பிச்சைக்காரன்’ பட பாணியில் ஹைடெக் ஆக பல்சர் பைக்கில் வலம் வந்து யாசகம் பெறும் நபர் ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 2000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? யார் அவர் என்பதைக் கீழே பார்க்கலாம்.

பல்சர் பைக்கில் வந்து யாசகம்... Tax கட்டாத பணக்காரர்கள் இவர்கள்தான்!
பல்சர் பைக்கில் வந்து யாசகம்... Tax கட்டாத பணக்காரர்கள் இவர்கள்தான்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அக்கூர் பி.வி.எம் புறம், நத்தம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் 47. இவருக்கு அமுல் 35 என்ற மனைவியும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தனுஷ் 18, பதினோராம் வகுப்பு படிக்கும் ஜோதி 17, பத்தாம் வகுப்பு படிக்கும் அஸ்வினி 14 ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர். லாரி மற்றும் பஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ரமேஷுக்கு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு சர்க்கரை நோயின் காரணமாக ஒரு கால் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெரிந்த ஓட்டுநர் பணிக்கு செல்ல முடியாமலும் ஒரு கால் இல்லாததால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாத காரணத்தினால் ரமேஷின் குடும்பம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தது. இதனை அடுத்து வேறு வழியின்றி தன் மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக யாசகம் பெறும் தொழிலை தேர்வு செய்தார் ரமேஷ். 

அதன்படி நாள்தோறும் தன்னுடைய வீட்டிலிருந்து பல்சர் பைக் மூலமாக அருகில் உள்ள சோளிங்கர், அரக்கோணம், வாலாஜா, ராணிப்பேட்டை அதேபோல் சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பகுதிகளில் வாகனத்தை ஓரமாக நிறுத்தி வைத்து அங்கே தனது இரண்டு கைத்தடிகளை கொண்டு யாசகம் பெற்று வருகிறார். ஹைடெக் ஆக யாசகம் பெற பல்சர் வாகனத்தில் வரும் ரமேஷிடம் விசாரித்த போது ஒரு நாளைக்கு சுமார் 2000 ரூபாய் வரை வருமானம் உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். அதுவும் கேரளாவில் உள்ள மூணாறு போன்ற சுற்றுலாத் தளங்களுக்கு சென்றால் 10-ல் இருந்து 15 நாட்கள் தங்கி சுமார் 60-ல் இருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டிக் கொண்டு வீடு திரும்புவதாக தெரிவித்தார். இது கேட்பவர்களை மிரட்சியில் ஆழ்த்தியது. துக்கப்பட்டு.. துயரப்பட்டு... கஷ்டப்பட்டு... கவலைப்பட்டு.. கடன் வாங்கி டிகிரி படித்து முடித்தவர்கள் கூட ஒரு மாதத்திற்கு ரூ. 15,000 - ரூ. 20,000 சம்பாதிக்க படாத பாடு படுகின்றனர். ஆனால் ஹாயாக பிச்சை எடுத்து லட்சங்களில் சம்பாதிக்கும் ரமேஷைப் பார்த்தால் மிகவும் பொறாமையாகத்தான் உள்ளது. கூலாக யாசகம் பெற்று சம்பாத்தியம் செய்யும் ரமேஷ், ரூ. 40,000 மதிப்புள்ள செல்போன், ரூ. 15,000 மதிப்புள்ள பவர் பேங்க் வசதியுடன் கூடிய கையடக்க ப்ளூடூத் ஹெட்செட் மற்றும் புத்தம் புது பல்சர் பைக்கில் வலம் வந்து நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறார்.