திமுக டூ தவெக… கொத்தாக மாறிய தொண்டர்கள்..!
திருவள்ளூரில் மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றி கழக கட்சியில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழக வெற்றி கழக கட்சியின் சார்பில் நடந்து முடிந்த முதல் மாநாட்டை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் மாற்று கட்சிகளிலிருந்து உறுப்பினர்கள் தொண்டர்கள் என அனைவரும் தமிழக வெற்றி கழக கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் அடுத்த பெரிய குப்பம் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 50- பேர் மாற்று கட்சியில் இருந்து த.வெ.க கட்சியில் இணைந்து உள்ளனர்.
மேலும் காரில் பொருத்தப்பட்டுள்ள திமுக கொடியினை அகற்றி தமிழக வெற்றி கழகத்தின் கொடியை பொருத்திக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் தீபாவளி திருநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்த தொண்டர்கள் மாவட்ட தலைவருக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
What's Your Reaction?