Rafael Nadal: "மன நிம்மதியுடன் வெளியேறுகிறேன்" - கண்ணீருடன் ஓய்வுப்பெற்றார் ரபேல் நடால்...!
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் ஓய்வை அறிவித்தார்
ஸ்பெயின் நாட்டின் மலகாவில் நடைப்பெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் ஸ்பெயின் தோல்வி அடைந்ததை அடுத்து சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஜாம்பாவன் ரஃபேல் நடால் ஓய்வு பெற்றார்.
டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் தன்னுடைய டென்னிஸ் வரலாற்றில் 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள பெற்றுள்ளார். இப்படி தன்னுடைய தனித்திறமையால் ஜாம்பவானாக திகழ்ந்த ரபேல் நடால் தன்னுடைய கடைசிப்போட்டியை தோல்வியுடன் முடித்துள்ளார். இது அவருக்கு மட்டுமில்லாது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் அணி டேவிஸ் கோப்பையில் நெதர்லாந்து அணியிடம் 2-1 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
டேவிஸ் கோப்பை 2024 இன் அரைஇறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்வதற்கு முன்பு ஸ்பெயினின் தேசிய கீதத்தின் போது அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
"நான் வென்ற பட்டங்கள் அதிகளவில் உள்ளன. ஆனால் நான் அதிகம் நினைவில் கொள்ள விரும்புவது மல்லோர்காவை சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதனாக இருப்பது தான்" என்று கூறினார். "எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. நான் மிகச் சிறிய குழந்தையாக இருந்தபோது எனது கிராமத்தில் டென்னிஸ் பயிற்சியாளராக இருந்த என் மாமா, ஒவ்வொரு நொடியிலும் என்னை ஆதரிக்கும் என்னுடைய சின்ன குடும்பம்… நான் ஒரு நல்ல மனிதனாக, அவர்களின் கனவுகளைப் பின்பற்றிய குழந்தையாக நினைவில் கொள்ள விரும்புகிறேன். நான் கனவு கண்டதை விட அதிகமாக சாதித்தேன்."
என்று கூறியுள்ளார்.
உண்மையாக சொல்ல வேண்டுமென்றல், எனது 20 வருட தொழில்முறை டென்னில் வாழ்க்கையில் நீங்கள் என்னை எப்போதும் உங்கள் தோள்களில் சுமந்தீர்கள். நல்ல தருணங்களில், அடுத்த புள்ளியில் வெற்றி பெற நீங்கள் உதவினீர்கள், மோசமான தருணங்களில், சந்தேகத்திற்கு இடமின்றி, நான் தொடர்ந்து சண்டையிட என்னைத் தொடர்ந்து முன்னோக்கி தள்ளினீர்கள், உங்கள் அனைவருடனும் என்னால் வாழ முடிந்தது. உண்மையாக, உலகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக ஸ்பெயினில் இருந்து இவ்வளவு அன்பைப் பெறுவதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
நான் உண்மையிலேயே மிகவும் ஆசி பெற்ற நபராக உணர்கிறேன். நீண்ட காலம் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி கூறிய ரபேல் நடால், என்னால் நன்றி மட்டுமே கூற முடியும், சிலர் இங்கு இல்லை, ஆனால் குறிப்பாக என்னுடை குடும்பதிற்கு நன்றி சொல்லி ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.
டென்னிஸ் உலகின் மற்றொரு ஜாம்பவானான, சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர், ரபேல் நடாலுக்கு பிரியாவிடை கொடுத்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கடிதத்தில், டென்னிஸ் அரங்கில் இருந்து நீங்கள் ஓய்வு பெறும் செய்தி அறிந்தேன். இவ்விஷயத்தில் உணர்ச்சி வசப்பட்டு மனதளவில் கலக்கமடையும் முன் ஒரு சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னை பல முறை நீங்கள் டென்னிஸ் போட்டிகளில் வீழ்த்தி இருக்கிறீர்கள். சிரமப்பட்டு உங்களை நான் வெல்லும் சந்தர்ப்பங்களை விட தோற்ற நிகழ்வுகளேஅதிகம் என்று கூறியுள்ளார். டென்னிஸ் உலகில் வேறு யாராலும் அளிக்க முடியாத சவாலை உங்களிடம் இருந்துதான் நான் பெற்றேன் என்று உணர்ச்சி பூர்வமாக தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?