Ladies Special Train : தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பெண்களுக்கு சிறப்பு ரயில்கள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Ladies Special Train From Tambaram To Chennai Coast : தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே நாளை (ஆகஸ்ட் 3ம் தேதி) முதல் 14ம் தேதி வரை கூடுதலாக 8 மின்சார ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Aug 2, 2024 - 12:58
Aug 3, 2024 - 15:42
 0
Ladies Special Train : தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பெண்களுக்கு சிறப்பு ரயில்கள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Ladies Special Train From Tambaram To Chennai Coast

Ladies Special Train From Tambaram To Chennai Coast : தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்களை செய்து தெற்கு ரயில்வே ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதாவது சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே நாளை (ஆகஸ்ட் 3ம் தேதி) முதல் 14ம் தேதி வரை கூடுதலாக சில மின்சார ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மேற்கண்ட நாட்களில் காலை 7.17, 8.19, 9.00, 9.22, 9.40, 9.50, மாலை 6.26, இரவு 7.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

மேலும் சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே நாளை முதல் 14 ம்தேதி வரை காலை 9.30, 9.45,10.00, 10.15, 10.30, 10.45, 11.00, 11.15, 11.30, மதியம் 12.00, 12.15, 12.30,12.45, இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மறுமார்க்கத்தில் பல்லாவரம் - சென்னை கடற்கரை இடையே மேற்கண்ட நாட்களில் காலை10.17, 10.32, 10.47, 11.02, 11.17, 11.32, 11.47 மதியம் 12.02, 12.17, 12.32, 12.47, 1.02, 1.17, 1.42 மற்றும் இரவு 11.30, 11.55 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

மேலும் தாம்பரம் - சென்னை கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே நாளை முதல் 14ம்தேதி வரை இயக்கப்படும் விரைவு மின்சார ரயில்,சாதாரண மின்சார ரயிலாக இயக்கப்படும் எனவும் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மேற்கண்ட நாட்களில் காலை 8.26, 8.39 ஆகிய நேரங்களில் மகளிர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயில் வரும் 14ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதும், 30க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தெற்கு ரயில்வே பல்வேறு மின்சார ரயில்களை ரத்து செய்துள்ளதால் நாளை முதல் வரும் 14ம் தேதி வரை சென்னை மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வழியாக செங்கல்பட்டு வரையிலும் மீண்டும் செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வழியாக பல்லாவரம் வரையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow