ஓடும் ரயிலை நிறுத்தி கல்லூரி மாணவர்கள் மோதல்.. கற்களால் தாக்கிய 5 பேர் கைது...

Presidency College Students Arrest : ஆவடி ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கற்களால் தாக்குதல் நடத்திய, 5 மாநிலக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Jul 20, 2024 - 02:08
Jul 20, 2024 - 16:03
 0
ஓடும் ரயிலை நிறுத்தி கல்லூரி மாணவர்கள் மோதல்.. கற்களால் தாக்கிய 5 பேர் கைது...
கைது செய்யப்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள்

Presidency College Students Arrest : கடந்த 1ஆம் தேதி மாலை ஆவடி ரயில் நிலையத்தில் சிக்னலுக்காக மின்சார ரயில் நின்று கொண்டிருந்தது. மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் சிக்னலில் நின்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருப்பதைக் கண்டு விரைவு ரயிலின் செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர்.

பின் பச்சையப்பன் கல்லூரி(Pachaiyappa's College) மாணவர்களை நோக்கி பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் கற்களால் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பதில் தாக்குதல் நடத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்து தலைமறைவாகினர். இது தொடர்பான வீடியோ போலீசாருக்கு கிடைக்கப்பெற்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் விரைவு ரயிலின் செயினை பிடித்து இழுத்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்கத்தில் நடத்திய பிரசிடென்சி கல்லூரியை சேர்ந்த ஐந்து மாணவர்களை ஆவடி ரயில்வே போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை சேர்ந்த ஐயப்பன் (20), ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜெகன் (18), திருத்தணியை சேர்ந்த சரத் (19), திருத்தணியை சேர்ந்த வல்லரசு (19) மற்றும் 17 வயது மாணவன் என ஐந்து பிரெசிடென்சி கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் தற்கொலை கொண்டு கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow