தமிழ்நாடு

பள்ளி ஊழியருடன் ஓரின சேர்க்கை.. செல்போன் பறிப்பு.. மாணவர்கள் கைது.. திடுக்கிடும் நெல்லை

நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அரசு பள்ளி ஊழியரிடம் செல்போன் பணம் பறித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி ஊழியருடன் ஓரின சேர்க்கை.. செல்போன் பறிப்பு.. மாணவர்கள் கைது.. திடுக்கிடும் நெல்லை
ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து ஊழியரிடம் செல்போன் பணம் பறித்த 4 சிறுவர்கள் கைது

திருநெல்வேலி பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளியில் தற்காலிக அலுவலக உதவியாளராக பணியாற்றும் 26 வயது வாலிபர் ஒருவர் அளித்த புகார் அளித்துள்ளார்.

ஊழியர் வேலை பார்க்கும் பள்ளியில் படித்து, தற்போது பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் உள்பட நான்கு பேர் சேர்ந்து ஓர் இன சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். சம்பவத்தன்று இரவு அங்குள்ள ஒரு செங்கல் சூளை பகுதியில் வாலிபருடன் நான்கு சிறுவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை அந்த சிறுவர்கள் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு 26 வயது ஊழியரிடம் வீடியோவை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட வாலிபர் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேரை தற்போது கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்

திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே சாதிய ரீதியிலான மோதல்கள் அதிகரித்து வருவதும் சிறிய சிறிய விஷயங்களுக்காக மாணவர்கள் உணர்ச்சி வசப்பட்டு ஆயுதங்களை எடுத்து பள்ளிக்கு வருவதும் தொடர் கதை ஆகி வருகிறது.

இந்நிலையில் தற்போது பள்ளி மாணவர்கள் அளவிலேயே ஓரினச்சேர்க்கைக்கு ஒருவரை அழைத்து வந்ததும் அதனை வீடியோவாக எடுத்து சம்பந்தப்பட்ட வரை மிரட்டி செல்போன் பணத்தை பறித்து சென்றதும் மிகப்பெரிய பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை பிரபல கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் வாலிபரை மிரட்டி செல்போன் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.