விதவிதமான கார்களில் பறந்த காதல் ஜோடிகள்... வாய் பிளந்து பார்த்த உள்ளூர்வாசிகள்
நியூசிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து 22 காதல் ஜோடிகள் தஞ்சைக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், பொதுமக்கள் செஃல்பி எடுத்துக்கொண்டனர்.
இந்தியாவிற்கே புதிய மாடல்களான ஜாக்குவார், மெர்சிடிஸ், ஆஸ்டின் ஹியலி, லகோண்டா, ஆல்வீஸ், போர்க்ஷ், பென்ட்லி, ஆல்ஃபா ரோமியோ, வோல்வோ உள்ளிட்ட பழமையான கார்களில் வெளிநாட்டு காதல் ஜோடிகள் 2606 கி.மீ. பயணமாக தஞ்சை வந்தனர். அந்த கார்களை ஆச்சர்யத்துடன் பார்த்து கார் அருகில் நின்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
நியூசிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து 22 காதல் ஜோடிகள் தென் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். நாம் அறியாத பார்த்திராத ஜாகுவார், மெர்சிடிஸ், ஆஸ்டின் ஹியலி, லகோண்டா, ஆல்வீஸ், போர்க்ஷ், பென்ட்லி, ஆல்ஃபா ரோமியோ, வோல்வோ உள்ளிட்ட பழமையான 22 வளகயான கார்களில் கோவாவில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர்.
கர்நாடகா, கேரளா சென்ற அவர்கள் தஞ்சை வழியாக பாண்டிச்சேரி செல்கின்றனர். தஞ்சை வந்த அவர்களின் கார்களை ஆச்சர்யத்துடன் பார்த்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கார் அருகில் நின்று செஃல்பி மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
18 நாட்களில் 2,606 கி.மீ காதலர்களாக காரில் வலம் செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்காமல் கிராமப்புற சாலைகள் வழியாக பயணிக்கின்றனர். கிராமத்து மக்களின் வாழ்வாதாரம், பண்பாடு, பொருளாதாரம், கலாச்சாரம் பற்றி தெரிந்து கொள்கின்றனர். இவர்களுடன் ஐ.சி.யூ ஆம்புலன்ஸ், மருத்துவர்கள். கார் மெக்கானிக் ஆகியோர் உடன் செல்கின்றனர்.
What's Your Reaction?