மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு: 2 ஆசிரியர்களுக்கு மீண்டும் சென்னையில் போஸ்டிங்

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Sep 25, 2024 - 12:46
Sep 25, 2024 - 12:56
 0
மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு: 2 ஆசிரியர்களுக்கு மீண்டும் சென்னையில் போஸ்டிங்

சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன் ஜென்மம் குறித்து சர்ச்சையாகப் பேசியுள்ளார் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அப்போது, முன் ஜென்மத்தில் தவறுகள், பாவங்கள் செய்ததால் தான் இப்போது மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் எனப் பேசியிருந்தார்.

அப்போது அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர், மகா விஷ்ணுவின் கருத்து தவறு என எதிர்ப்புத் தெரிவித்தார். அதனையடுத்து மகா விஷ்ணுவுக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மகா விஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மகாவிஷ்ணு கடந்த 8ஆம் தேதி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் தொடர்பாக அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். 

அதேபோன்று சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவுகள் கடந்த 6ஆம் தேதி வழங்கப்பட்டன.

இரண்டு தலைமையாசிரியர்களும் புதிய பணியிடங்களில் சேராமல் மீண்டும் சென்னையில் பணி வாங்குவதற்கு தீவிர முயற்சி எடுத்தனர். இரண்டு தலைமை ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் இயக்கங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இந்த நிலையில், இரண்டு தலைமை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் சென்னைக்கு பணியிடமாறுதல் வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழரசி, விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி , அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக, அடையார் ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் டேவிட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சண்முகசுந்தரம், அடையார் ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow