இதய நலன் காக்க மேற்கொள்ள வேண்டிய 11 விஷயங்கள்
இதயம் தொடர்பான பிரச்னைகள் இன்றி ஆரோக்கியமாக வாழ என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், எதையெல்லாம் எடுத்துக் கொள்ளக்கூடாது... மேலும் நமது வாழ்வியல் எப்படியாக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பார்ப்போம்.
இதயம்தான் நமது உடலின் ஆதார உறுப்பு. இன்றைக்கு வாழ்வியல் மாற்றம் காரணமாக இதய நோய்களுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதய நலனை நாம் பேணுவது மிகவும் அவசியம். அன்றாட வாழ்வில் பின்வரும் 10 விசயங்களை செய்தாலே போதும் இதய நலனைப் பேணிக்காக்க முடியும்...
நாளொன்றுக்கு…
10 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.
9 நட்ஸ் சாப்பிட வேண்டும்.
8 மணி நேரம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்க வேண்டும்.
7 வேளைகளாகப் பிரித்து குறைவான அளவில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
6 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
5 கிராம் உப்புதான் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4 தேக்கரண்டி கொழுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
3 லிட்டர் அளவில் நீர் ஆகாரங்களை அருந்த வேண்டும்.
2 மணி நேரத்துக்கும் குறைவாகவே டிவி, மொபைல், கம்ப்யூட்டர் திரைகளைப் பார்க்க வேண்டும்.
1 மணி நேர உடற்பயிற்சி அவசியம்.
0 அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு, சக்கைத் தீனி (ஜங்க் ஃபுட்) ஆகியவற்றை தவிர்த்து விட வேண்டும்.
இதய நலனுக்கான உணவு அட்டவணை
அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டியவை
காய்கறிகள், பழங்கள்: ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழம், ஆரஞ்சு மற்றும் பூசணிக்காய், கீரை, தக்காளி, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ் ஆகியவற்றை நாளொன்றுக்கு 5 பகுதிகளாக பிரித்து உண்ண வேண்டும்.
நார்ச்சத்துள்ள உணவுகள்: ஓட்ஸ், கோதுமை, கைக்குத்தல் அரிசி, தானியங்கள், கோதுமை பிரட், பயிறு வகைகள்
இறைச்சி: தோல் நீக்கப்பட்ட கோழி மற்றும் ஆட்டிறைச்சியை எடுத்துக் கொள்ளலாம். பொறித்த, வேக வைத்த, ஆவியில் வேக வைத்த, க்ரில்டு செய்யப்பட்டதையும் எடுத்துக் கொள்ளலாம்.
மீன், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிறு மற்றும் சீஸ்.
தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டியவை
சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கனோலா எண்ணெய், நட்ஸ், வேர்க்கடலை வெண்ணெய் ஆகிய கொழுப்புப் பொருட்களைத் தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டியவை
வறுத்த உணவுகள், நொறுக்குத் தீனிகள், கேக், பிஸ்கட், இனிப்பு பலகாரங்கள், குளிர்பானங்கள், சாக்லேட் மற்றும் ஆல்கஹால்.
இறுதியாக சமைத்த பிறகு உப்பு சேர்ப்பது கூடாது. அது உடல் நலத்துக்கு உகந்ததல்ல.
What's Your Reaction?