'சிங்கிள் எடுங்க மஹாராஜா'.. யுவராஜ் சிங் சொன்னதை கேட்காத பவர் ஹிட்டர்

அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், பயிற்சி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Sep 4, 2024 - 20:32
Sep 4, 2024 - 21:00
 0
'சிங்கிள் எடுங்க மஹாராஜா'..  யுவராஜ் சிங் சொன்னதை கேட்காத பவர் ஹிட்டர்
அபிஷேக் சர்மாவுக்கு யுவராஜ் சிங் பிறந்தநாள் வாழ்த்து

அதிரடி வீரர் அபிஷேக் சர்மா கடந்த ஐபிஎல் போட்டியில் தனது அபார பேட்டிங்கால், பல சாதனைகளை படைத்திருந்தார். அதுவும், டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து, 9.4 ஓவர்களில் 165 ரன்களை சேஸிங் செய்தது எல்லாம், அடி வாங்கிய லக்னோ அணியால் மட்டுமல்ல, எவராலும் மறக்க முடியாது. ஐபிஎல் வரலாற்றிலேயே, 150 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை சேஸிங் செய்ததில் இதுதான் அதிவேகமாக இருந்தது.

இதுவரை 5 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, தனது 2ஆவது டி20 போட்டியிலேயே [ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி] வெறும் 46 பந்துகளில் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிவேகமாக சதம் விளாசியவர்கள் பட்டியலில், இது 3ஆவது அதிவேகமாக சதமாக அமைந்தது. ரோஹித் சர்மா (35), சூர்யகுமார் யாதவ் (45) முதலிலிடத்தில் உள்ளனர்.

அதேபோல், கடந்த 2024 ஐபிஎல் போட்டியில், 16 இன்னிங்ஸில் விளையாடிய அபிஷேக் சர்மா 484 ரன்கள் குவித்தார். இதில் 7 அரைசதங்களும் அடங்கும். அதேபோல், அந்த ஐபிஎல் தொடரில் 42 சிக்ஸர்களை விளாசினார். ஒரு ஐபிஎல் தொடரில், தனி நபரால் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச சிக்ஸர்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்கு எதிராக 63 (23 பந்துகள்) ரன்கள், டெல்லி அணிக்கு எதிராக 46 ரன்கள் (12 பந்துகள்), லக்னோ அணிக்கு எதிராக 75 ரன்கள் (28 பந்துகள்), பஞ்சாப் அணிக்கு எதிராக 66 ரன்கள் (28 பந்துகள்) அடித்தது எல்லாம் அட்டகாசமான இன்னிங்ஸ்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் ஸ்பின்னர்களுக்கு எதிராக 66 ரன்களை எடுத்து இருந்தார். அதுவும் வெறும் 28 பந்துகளில். இதற்கு முன்னதாக, தனது கிரிக்கெட் குரு என்று அபிஷேக் சர்மாவால் மதிக்கப்படும், யுவராஜ் சிங் 2012ஆம் ஆண்டு, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 57 ரன்கள் குவித்து இருந்தார்.

இந்நிலையில், யுவராஜ் சிங் தனது மானசீக சீடனான அபிஷேக் சர்மாவுக்கு, 23ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், யுவராஜ் சிங் தனது பங்களிப்புடன் கூடிய பயிற்சி வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் அபிஷேக் தனது ஆலோசனையைப் புறக்கணித்து பெரிய சிக்ஸர்களை அடிக்கிறார். இதனை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

மேலும் தனது பிறந்தநாள் வாழ்த்தில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிஷேக். நீங்கள் மைதானத்தில் நிறைய சிங்கிள்களை, இந்த ஆண்டு எடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். கடின உழைப்பில் ஈடுபடுங்கள்! வரவிருக்கும் ஒரு சிறந்த வருடத்திற்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சி வீடியோவில், லாஃப்ட் ஷாட்களை முயற்சிக்க வேண்டாம் என்றும் யுவராஜ் சிங் கூறுகிறார். இருப்பினும், அதையெல்லாம் காதில் வாங்காமல், அபிஷேக் சர்மா பந்துகளை மைதானத்திற்கு வெளியே சிக்ஸர்களை அடித்து நொறுக்குகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ காண இங்கே கிளிக் செய்யவும்: https://x.com/i/status/1831188498889474255

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow