தொழில்நுட்பம்

PF கணக்கு வச்சிருக்கீங்களா? அப்போ உங்களுக்கான ஒரு ஹாப்பி நியூஸ் தான் இது.. 

EPFO பயனாளர்கள் UPI மற்றும் ATM மூலமாக தங்கள் PF பணத்தை எடுக்கலாம் என்றும், மேலும் இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் EPFO ​​உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை எடுக்கலாம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார்.

PF கணக்கு வச்சிருக்கீங்களா? அப்போ உங்களுக்கான ஒரு ஹாப்பி நியூஸ் தான் இது.. 
PF கணக்கு வச்சிருக்கீங்களா? அப்போ உங்களுக்கான ஒரு ஹாப்பி நியூஸ் தான் இது.. 

இதில் ஸ்பெஷலே ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் முறையை பற்றி விவாதித்து வந்த நிலையில், இனி யூபிஐ மூலமும் பயனர்கள் பணத்தை எடுக்கலாம் என்ற தகவல் பயணர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதாவது, EPFO அதன் செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துக் கொண்டே வருகிறது.  அந்த வகையில், வருங்கால வைப்புநிதி கணக்கை தொழிலாளர்கள் எளிதாக கையாளும் விதமாக EPFO 3.0 என்ற தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. 

அதன்படி, பிஎஃப் பணத்தை எடுக்கும் செயல்முறையை சீராக்க 120-க்கும் மேற்பட்ட தரவுத்தளங்களை (Databases) ஒருங்கிணைத்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வங்கி சேவைக்கு இணையாக மிகப்பெரிய மாற்றத்துடன் வருங்கால வைப்புநிதி அமைப்பு செயல்படும் என கூறப்பட்டுள்ளது. 

கோரிக்கை செயல்முறை வெறும் 3 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்போது 95 சதவீத கோரிக்கைகள் தானியங்கி மயமாக்கப்பட்டு உள்ளன. மேலும் அதை இன்னும் எளிதாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த புது நடைமுறையில், வங்கிக் கணக்கில் இருப்பை பார்ப்பது போல, யுபிஐ செயலிகள் மூலமாக கணக்கில் உள்ள இருப்பை தெரிந்துகொள்ள முடியும். 

அதேபோல, தானியங்கி முறை மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரங்களில் எடுக்க முடியும். மேலும், தேவையான வங்கிக் கணக்கிற்கும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், பிரத்யேக அட்டையை பயன்படுத்தி ஏடிஎம் மூலமாக எடுத்துக் கொள்ள முடியும். 

பிஎஃப் தொகையை தொழிலாளர்கள் பெறுவதற்கு விண்ணப்பித்தால் 3 நாள்களுக்குள் அந்த நடைமுறை நிறைவடைவது மட்டுமல்லாமல், மொத்தத் தொகையில் 95 சதவீதம் வரை ரொக்கமாகக் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என தொழிலாளர் நலத்துறை செயலாளார் சுமிதா தவ்ரா கூறியுள்ளார்.

இதன்மூலம், அவசர மருத்துவ சிகிச்சை, வீடு, கல்வி மற்றும் திருமணத்திற்கான செலவுகளைச் சமாளிக்க இது உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பிஎஃப் தொகை அவசரத் தேவைக்காக எடுக்கும் வசதியைப் பெற முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இதன்மூலம் அவர்களுக்கு தேவையான தொகையை மிக எளிதாகவே பெற முடியும் என்பதால் தொழிலாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இது மாறியிருக்கிறது.