தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ““இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லைத் தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கூறியிருக்கிறார். இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள். வலைகளை கிழித்து எறிந்தார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றார்கள்? இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது? தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும்தான் எல்லை தாண்டி வருகிறார்களா? கேரள மீனவர்கள் வரவில்லையா? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா? இலங்கை மீது பொருளாதார தடை செய்ய வேண்டும். மேலும் கட்சத்தீவை மீட்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவின் திட்டங்கள் அனைத்திற்கும் கருணாநிதி பெயர்தான் வைக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள்தான் திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் உதயசூரியன் சின்னம்தான் உள்ளது. அதிகாரம் தமிழன் கைக்கு வரும்போது இந்த சூழ்நிலை மாறும். அந்த தமிழன் நானாக இருக்க கூடாதா? நாந்தான் அந்த தமிழ் மகன். மேலும், “அதுல பாதி, இதுல பாதி என்று கிடையாது.கல்விகேற்ற வேலை, பொருளாதாரா வளர்ச்சி உண்டு. ஆனால் இது போர், ஞாபகம் இருக்கட்டும். தமிழ் தேசியம் கடற்கரையை காக்கும். ஆனால் திராவிடம் கடற்கரையை கல்லறையாக்கும்! 2026 தேர்தல் கட்டமைப்பு நடக்கிறது. அனைத்து கட்சியும் என் பின்னால் ஓடி வருகிறார்கள். நான் என்ன செய்கிறேனோ அதைத்தான் பின்பற்றுகிறார்கள். திராவிட உப்பிஸ்க்கு 200 தான், தேர்தல் நேரத்தில் 1000 வந்ததா என கேட்பார்கள். சீமான் எப்போதும் தனித்துதான் போட்டியிடுவான். என் பயணம் என் கால்களை நம்பி தான் என்று இருக்கிறேன்” எனக் கூறினார்.