உதயநிதி பிரச்சாரத்தால் வெற்றி; 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - திமுக அமைச்சர் பெருமிதம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த இரண்டு நாள் பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Jul 14, 2024 - 14:39
Jul 15, 2024 - 10:40
 0
உதயநிதி பிரச்சாரத்தால் வெற்றி; 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - திமுக அமைச்சர் பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற அன்னியூர் சிவா

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த இரண்டு நாள் பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம்தமிழர் கட்சியில் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். 

தமிழகத்தில் 2026ல் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு விக்கிரவாண்டி இடைதேர்தல் முன்னோட்டம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருவதால் தமிழகமே இந்த தொகுதியின் வெற்றி நிலவரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தமுள்ள 2,37,031 வாக்காளர்களில் 1,95,495 பேர் வாக்களித்தனர். இதன்படி 82.48 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

வாக்குகள் எண்ணப்பட்டதன் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மேலும் அமைச்சரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கௌதம சிகாமணி, சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். அன்னியூர் சிவர், முதலமைச்சரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “விக்கிரவாண்டி இடைதேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்ட அன்னியூர் சிவா இதுவரை நடந்த இடைத்தேர்தகளில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த வெற்றி அன்னியூர் சிவா அவர்களுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி மற்றும் அனைத்து கூட்டணி கட்சிகளும் சேர்ந்து பெற்றுக் கொடுத்த வெற்றி. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த இரண்டு நாள் பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

கலைஞர் நூற்றாண்டில் கிடைத்திருக்கிற மிக பெரிய வெற்றி இது. 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும்” என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு அமைச்சர் பொன்முடி அன்னியூர் சிவா விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் கௌதம் சிகாமணி ஆகியோர் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர். அண்ணா அறிவாலயத்தில் அன்னியூர் சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow