Fishermen Arrest : தமிழக மினவர்கள் மீண்டும் கைது; மத்திய அமைச்சரை சந்திக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்

Anita Radhakrishnan Meet Jaishankar on Fishermen Arrest : இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.

Aug 6, 2024 - 09:47
Aug 6, 2024 - 12:37
 0
Fishermen Arrest : தமிழக மினவர்கள் மீண்டும் கைது; மத்திய அமைச்சரை சந்திக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்
Anita Radhakrishnan Meet Jaishankar on Fishermen Arrest

Anita Radhakrishnan Meet Jaishankar on Fishermen Arrest : எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது தற்போது தொடர்கதையாகிவிட்டது. அண்மையில் இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 22 தமிழக மீனவர்களை(Tamil Nadu Fishermen Arrest) எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் மீனவர்கள் சென்றிருந்த 2 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்துள்ளனர். இதையடுத்து கைது செய்த 22 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

தற்போது வரை 173 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். மீனவர்கள் இதுபோன்று சிறைபிடிக்கப்படுவது, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினரையும் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

இந்நிலையில் தமிழக மீனவர்களின் இந்த நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு காணும்படி மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டுமென்றும், இதுதொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் படிக்க: கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்வா? சென்னை மாநகராட்சி விளக்கம்!

இதுகுறித்து முன்பே மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அதில், “பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும், தமிழக மீனவர்களுக்கு நடக்கும் இந்த பிரச்சனையை தேர்தல் நேர முழக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் பாஜக அரசு எடுக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow