K U M U D A M   N E W S

‘அமரன்’ படக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் வாழ்த்து!

'அமரன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரை சந்தித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதியை ராஜ்நாத் சிங் புகழ்ந்தது ஏன் தெரியுமா?.. முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த ரஜினி!

''விமர்சனங்கள் தேவைதான். அது வேண்டும். ஆனால் விமர்சனம் மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக் கூடாது. விமர்சனம் செய்யுங்கள்; ஒருவருடைய மனதை நோகடிக்காதீர்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் மரணம்.. ராஜ்நாத் சிங், ஸ்டாலின் அஞ்சலி!

''ராகேஷ் பால் தேச பக்தராகவும், அர்ப்பணிப்புள்ள தலைவராகவும் விளங்கினார். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவு கூறப்படும்'' என்று இந்திய கடலோர காவல் படை இரங்கல் தெரிவித்துள்ளது.

'வரலாற்றில் அழிக்க முடியாத தலைவர்'.. கருணாநிதிக்கு புகழ்மாலை சூட்டிய ராஜ்நாத் சிங்!

சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்று தந்தவர் கருணாநிதி தான். தமிழ்நாட்டில் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியவர் அவர் தான். வரலாற்றில் அழிக்க முடியாத பல்வேறு சாதனைகளை படைத்த கருணாநிதி, ஒரு மாநிலத்தின் தலைவராக இல்லாமல் தேசிய தலைவராக பார்க்கப்பட்டார்.

‘கலைஞர் நினைவு நாணயம்’ - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்..

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.