K U M U D A M   N E W S

திருப்பதி லட்டு விவகாரம்... தொடர்ந்து 14 மணி நேரம் ஆய்வு!

திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் நிறுவனத்தில் 14 மணி நேரம் நடத்திய ஆய்வு மற்றும் விசாரணை நிறைவடைந்துள்ளது.

#BREAKING: Tirupati Laddu Issue: லட்டு விவகாரம் - மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

"திருப்பதிக்கு லட்டு வழங்கியதாக கூறப்படும் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் செய்த விதிமீறல் என்ன?" மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

திருப்பதி லட்டு விவகாரம்.. SIT விசாரணை தற்காலிக நிறுத்தம்

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆந்திர DGP திருமலா ராவ் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண் டயலாக்கை மாற்றி மாற்றி பேசுகிறார்.... ரோஜா கடும் விமர்சனம்!

கதாநாயகர்கள் படத்தில் கொடுக்கக்கூடிய டயலாக்கை எப்படி பேசுவார்களோ அதே போல் பவன் கல்யாண் ஒவ்வொரு முறையும் மாறி மாறி பேசி வருகிறார் என முன்னாள் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார்.

லட்டு விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

திருப்பதி லட்டு சர்ச்சை..தொடங்கியது தோஷ நிவர்த்தி சாந்தி யாகம்

திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது.

LIVE | ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் - ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது. திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு விவகாரம்: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

லட்டில் விலங்கு கொழுப்பு.. ஆந்திர முதலமைச்சர் விளக்கமளிக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவிடம் விளக்கம் கேட்டுள்ளார்