K U M U D A M   N E W S

திருச்செந்தூர் கோயில் விவகாரம் – ”கடமையை சரியா செய்யுங்க” – நீதிமன்றம் சொன்ன அட்வைஸ்

கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை.. திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டிய  வாடகை பாக்கி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

குடிநீருக்காக பயன்படுத்தும் ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா..? - நீதிமன்றம் அதிரடி கேள்வி

குடிநீருக்காக பயன்படும் வைகை ஆற்றை மாநகராட்சி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டாமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வைகை ஆற்றில் குப்பை போடுவோர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"பணியை இழக்க நேரிடும்..." நெருப்பாய் கொதித்த நீதிபதி

சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்ததால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் தங்களது பணியை இழக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

4 பல்கலை. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

குரூப் 1 தேர்வில் தமிழ்வழி கல்வியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அண்ணாமலை பல்கலை., உள்பட 4 பல்கலைக் கழகங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இடைக்காலத் தடை

சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை விட சார்பதிவாளர் உயர்ந்தவர்களா..?

மூல ஆவணங்கள் இல்லை எனக்கூறி பத்திரப்பதிவை நிராகரித்த சார்பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடகோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தை விட சார் பதிவாளர் உயர்ந்தவர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.   

"யூகலிப்டஸ் மரங்கள் குறித்து கட்டுக்கதை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என டேராடூன் வன ஆராய்ச்சி மையமும் தெரிவித்துள்ளது. யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் தீங்கு ஏற்படுவது பற்றி மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்படாததால் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

OTT Platforms Censor : ஓடிடி யிலும் தணிக்கை... மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

OTT Platforms Censor Issue in Madurai High Court : ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள் போன்றவற்றை தணிக்கை செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கூவமாக மாறும் தாமிரபரணி ஆறு... உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை

தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கவில்லை என்றால் தாமிரபரணி ஆறு கூவமாக மாறிவிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Rajaji Hospital : மதுரை அரசு மருத்துவமனை விபத்து.. அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Madurai Rajaji Hospital Accident : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளே கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணைக்கு எடுத்தது. விசாரணையில் சுகாதாரத்துறை செயலாளர், மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர், பொதுப்பணித்துறை பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Water Canel Issue : அரசு அதிகாரிகள் மீது நீதிமன்றம் அதிருப்தி

Water Canel Issue in Ramanathapuram : ராமநாதபுரத்தில் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார இளைஞர்கள் தாமாக முன் வந்து அனுமதி கோரியும் ஏன் அனுமதி வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரையில் 2 முக்கிய நுழைவு வாயில்களை இடிக்க அதிரடி உத்தரவு

மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவு வாயில் ஆகியவற்றை இடித்து அகற்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

வீடியோ வெளியிட்டதால் காவலர் பணிநீக்கம்.. அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி கருத்து

மூன்று முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.