K U M U D A M   N E W S

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரைகளை சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.22 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மக்களே அலர்ட்டா இருங்க... எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி, நெல்லையில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீபாவளி என்றும் பாராமல் வெளுக்கும் கனமழை..

தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்து வரும் கனமழையால் சிறுவர்கள் பட்டாசுகள் வெடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை: தமிழக கோயில்களில் சிறப்பு வழிபா

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வகையில் தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

தமிழகம் முழுவதும் குவிக்கப்பட்ட போலீசார் - பரபரப்பின் உச்சம்..என்ன காரணம்?

வெளியூர் செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் 48,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Today Headlines : 5 மணி தலைப்புச் செய்திகள் | 5 PM Today Headlines Tamil | 28-10-2024 | Kumudam News

Today Headlines : 5 மணி தலைப்புச் செய்திகள் | 5 PM Today Headlines Tamil | 28-10-2024 | Kumudam News

தேர்வர்களை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 4 பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 8,932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்திருந்த நிலையில் மேலும் 559 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பா..? முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் எம்.சரவணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், முதலமைச்சர் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது, இதைதான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை.. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். 

"விஜய் திமுகவை தான் அடிக்கிறார்.." ஸ்பீச்சில் சூசகம் - உடைந்த ரகசியம் | TVK Vijay Speech

தவெக மாநாட்டில் பேசிய விஜய் திமுவை சாடிய நிலையில், அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

விஜய் பேச்சு "இது பாஜக கோஷம்'' - "சினிமாலதான் Hero, இங்க zero" | TVK Vijay Speech | Maanadu | TVK

தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்

பேரிடர் மீட்பு படை கண்காட்சி... ஆர்வமுடன் பார்த்து சென்ற பொதுமக்கள்!

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pulsar Bike-ல் சென்று யாசகம்.. ஒரு நாள் வசூல் ரூ.2,000 ஆச்சரியப்படுத்தும் ஹைடெக் யாசகர்

பல்சரில் வலம் வரும் ஹைடெக் யாசகர் ஒரு நாள் வசூல் ரூ.2,000 என ஆச்சரியப்படுத்துகிறார். 

வாக்காளர் பட்டியல் - தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன அப்டேட்

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியீடு. அக்.29 முதல் நவ.28 வரை கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் குறித்து விண்ணப்பிக்கலாம் - தேர்தல் ஆணையம்

14 மாவட்டங்களுக்கு கனமழை.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீபாவளி ஆம்னி பஸ் டிக்கெட் பல மடங்கு உயர்வு... கண்டுகொள்ளுமா தமிழக அரசு... பொதுமக்கள் புலம்பல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளை உருவாகும் புயல்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை.. நாளை மறுநாள் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் ஒரு நாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும், பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 19-10-2024

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 19-10-2024

மீண்டும் மீண்டுமா... 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் 

மீனர்களுக்கு மொட்டை அடிக்கிறார்கள்.. மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாதா?.. திலகபாமா குற்றச்சாட்டு

மீனவர்களுக்கு தண்டனை கொடுத்து மொட்டை அடிக்கிறார்கள் என்றும் மீன்பிடிக்க ஆசையே வரக்கூடாது என்பதுபோல் இலங்கை அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாக பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.

செயலில் ஒன்றுமில்லை.. விளம்பரம் தான் அதிகமா இருக்கு.. தமிழிசை சவுந்தரராஜன்

மழைக்கால தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயலை விட விளம்பரம் தான் அதிகமாக உள்ளது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அக்டோபரை விட நவம்பரில் அதி கனமழை.. இப்போதே எச்சரித்த வெதர்மேன்

அக்டோபர் 16, 17ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு ரெட் அலர்ட்.. முதலமைச்சர் அவசர ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.