ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து எந்தப் பயனும் இல்லை -சென்னை உயர்நீதிமன்றம்
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தான் பிறப்பித்த உத்தரவுபடிதான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெளிவுப்படுத்திய நீதிபதி காவல்துறை எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு வலியுறுத்தினார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கின் விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை போலீசார் தவிர்க்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உணவு மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மக்களை வெளியேற கூறி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் தங்களை காலி செய்ய சொன்னால் தற்கொலை செய்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஸ்போர்ட்-டை புதுப்பிக்கக் கோரி, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அளித்த விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்த நிலையில் மூன்று வாரங்களில் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"
புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு, முந்தைய நாள் அனுமதி மறுத்தது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்
ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்ததை எதிர்த்து மனு.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டது.
சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அனைவரும் வெட்கபட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.