கொந்தளிக்கும் கடல் அலை... ஆபத்தை உணராத மக்கள்
கொட்டும் மழையில் கடல் அலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
கொட்டும் மழையில் கடல் அலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. சன்னதி கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாற்றம் அடையவுள்ளதை அடுத்து, சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மேலபசலை கிராமத்தில் கால்வாய் உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்டை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
நவம்பர் 26 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.
தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் பெய்த கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி
கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
2 நாள் பெய்யும் மழையை சென்னை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.