BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி செல்லுமா? - நீதிமன்றம் தீர்ப்பு | Vikravandi
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த இரண்டு நாள் பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
''திமுக-அதிமுக ஜென்ம எதிரி. ஆனால் இந்த தேர்தலில் காசை வாங்கி கொண்டு அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி உள்ளார்கள். இந்த தேர்தல் நேர்மையான முறையில் நடந்து இருந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்பது தான் கள நிலவரம்''
திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் சாட்டை துரைமுருகனை கைது செய்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் திமுக அரசு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தவறி விட்டதாக சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டி இருந்தார்.
276 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு சிறு, சிறு பிரச்சனைகளை தவிர அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் வாக்களிக்க 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்தான விரிவான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை சுட்டிக்காட்டியும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தும் பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.