K U M U D A M   N E W S

இபிஎஸ் கிணற்றுத் தவளை.. ஜாதிய வன்மத்துடன் பேசி வருகிறார்.. அண்ணாமலை காட்டம்

எடப்பாடி பழனிசாமி மனதில் அவ்வளவு ஜாதிய வன்மம் உள்ளது என்றும் முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா? என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? - இபிஎஸ் விளாசல்

அசட்டுத் துணிச்சலோடு வாய் வீரம் காட்டிக்கொண்டு மமதையின் உச்சியில் அலைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?.. ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் - ஆ.ராசா சாடல்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

கவர்னர் தேநீர் விருந்து.. கலைஞர் நினைவு நாணயம் வெளியீடு.. தொடர்புபடுத்திய இ.பி.எஸ்.

கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில், பாஜக பங்கேற்கும் என அண்ணாமலை உறுதிப்படுத்திய காரணத்தால், கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

'நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி'.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

'நீட்' ரத்து ரகசியத்தை எப்போது சொல்வீங்க உதயநிதி?.. கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி!

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.

சசிகலா, தினகரன், ஓபிஎஸ்... வெளியில் தெரியாமல் இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை.. கே.சி.பழனிசாமி அப்டேட்

அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் வெளியில் தெரியாமல், எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

EPS : மற்ற மாநிலங்களுக்கு செல்லும் தொழிற்சாலைகள்.. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று என்ன பயன்?.. எடப்பாடி தாக்கு!

ADMK Edappadi Palaniswami on Semiconductor Plants in Tamil Nadu : ''ஆட்சிக்கு வந்து 38 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், விடியா திமுக அரசு முணைப்பு காட்டாததன் காரணமாக செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் அசாம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Chennai Car Race: சென்னை கார் ரேஸ்... திமுகவினர் கட்டாய வசூல்... அண்ணாமலைக்கு உதயநிதி சவால்!

Minister Udhayanidhi Stalin on Car Race Sponsors Issue : சர்வதேச அளவில் பிரபலமான ஃபார்முலா 4 கார் ரேஸ் போட்டிகள், முதன்முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஸ்பான்ஸர் பெறுவதற்காக திமுகவினர் கட்டாய வசூல் செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜக உடன் கூட்டணி என்பது இனி இல்லை... எடப்பாடி பழனிசாமி உறுதி

ADMK Edappadi Palaniswami About BJP Alliance : தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பொதுமக்கள் பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை திமுக ஆட்சியில் உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா?.. பாஜகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

''வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திமுக ஃபர்ஸ்ட் எண்ட்ரி... ஓடோடி சென்ற ஈ.பி.எஸ் - தொடங்கியது தேர்தல் யுத்தம்..

Edappadi Palaniswami X Post vs Udhayanidhi Stalin Speech : 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அஇஅதிமுக தொடங்கி விட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வு: தேர்தல் வெற்றிக்கு திமுகவின் பரிசு.. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சாடல்!

''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் அரசு குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு''

யாரை காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்... சந்தேகம் எழுப்பும் எடப்பாடி பழனிசாமி!

''காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது? கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டுதான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?''

முதல்ல அவங்கள பிடிச்சி உள்ளே போடுங்க.. சாட்டை துரைமுருகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த இபிஎஸ்

திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் சாட்டை துரைமுருகனை கைது செய்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

'2026 டார்கெட்'.. 'இளைஞர்கள் பலம்'.. எடப்பாடியின் மாஸ்டர் பிளான்.. நிர்வாகிகளிடம் பேசியது என்ன?

''கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாதம் இருமுறை மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்த்து அவர்களுக்கும் முக்கிய பொறுப்புகளில் வாய்ப்பளியுங்கள்''

'இனி ஸ்டாலினிடம் சொல்லி எந்த பயனும் இல்லை'.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு ட்வீட்.. என்ன விஷயம்?

''மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்''

ஸ்டாலினுக்கு மட்டும்தான் தெரியும்.. எல்லாம் பாகப் பிரிவினை சண்டை - இ.பி.எஸ். தாக்கு

கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. எல்லாம் பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று  நினைக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை… முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக சாடிய எடப்பாடி, அண்ணாமலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டங்கள் மூலம் அப்பட்டமான இந்தி திணிப்பு... பாஜகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

''அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது''