K U M U D A M   N E W S

#JUSTIN || வாக்கி டாக்கி வழக்கு - இளைஞருக்கு ஜாமின்

மதுபோதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமின்

”கல்லூரிகளை மூடிவிடலாம்” - தமிழக அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்

அரசு சட்ட கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத செங்கற்சூளைகள் விவகாரம்.. உயர்நீதிமன்றம் அதிருப்தி

கோவை வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைக்கு  எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகம் மீது  சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.  

கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை... அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RSS அணிவகுப்புக்கு அனுமதிக்க தாமதம் ஏன்..? - நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம்... அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

Senthil Balaji Case Updates : செந்தில் பாலாஜியின் வழக்கு தள்ளுபடி

Senthil Balaji Case Updates : செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.