அரசியல்

அடுத்த ஆக்சனில் ஸ்டாலின்... பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம்...

2026ல் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் திமுக ஈடுபட்டு வரும் சூழலில், ஏற்கனவே துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது கட்சியை வலுப்படுத்தும் முனைப்பில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது. அவ்வகையில் சீனியர்களின் பலரது மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

அடுத்த ஆக்சனில் ஸ்டாலின்... பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம்...
அடுத்த ஆக்சனில் ஸ்டாலின்... பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம்...

திமுகவை பொறுத்தமட்டில் மாவட்ட செயலாளர் பதவி என்பது மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது. திமுகவில் மாநில அளவிலான பொறுப்புகள் வழங்கினாலும் மாவட்ட செயலாளர் பதவியை விட்டுகொடுக்கமாட்டார்கள் என்பதே நிசப்தமான உண்மை. திண்டுக்கல் மாவட்டமே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஐ.பெரியசாமிக்கு துணை பொதுச்செயலாளர் வழங்கப்பட்ட போது அவர் அதை பெரிதும் விரும்பவில்லை. நீண்ட ஆண்டுகாலமாகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர் விவகாரத்தில் சாப்ட் கார்னே கடைப்பிடித்து வந்தார். அங்கொன்றும் இங்கொன்றும் என சர்ச்சை பெரிதாகும் நபர்களின் மாவட்ட செயலாளர் பதவியே பறிக்கபபட்டதே தவிர மொத்தமாக பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

மாவட்ட பிரிப்பு:

திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்ட செயலாளர்கள் தற்போது உள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தொகுதிகளின் அடிப்படையில் மாவட்டத்தை பிரிக்கவுள்ளதாக தெரிகிறது. தற்போது ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் குறைந்தபட்சம் 3 தொகுதி அதிகபட்சம் 4 தொகுதிகள் கொண்டுள்ளனர். தற்போது 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளருக்கு என பிரித்து மேலும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உள்ளதாக தெரிகிறது. இந்த முடிவு ஓர் ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டதாகவும் ஆனால் சீனியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. தற்போது துணை முதல்வர் பதவி உதயநிதி ஏற்ற நிலையில் மாவட்டங்களை வலுப்படுத்த செயல்படாத மற்றும் மூத்த உறுப்பினர்களை மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் சரியாக பணி செய்யாத மாவட்ட செயலாளர்களின் பட்டியலும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. தற்போது தென்காசி மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சீ.வி.கணேசன் தவிர்த்து வேறு யாரும் பட்டியலினத்தவர்கள் இல்லாத நிலையில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான திமுக பட்டியலினத்தவருக்கு மாவட்ட செயலாளர் பதவியில் அதிக வாய்ப்பளிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் கீதா ஜீவனை தவிர்த்து பெண் மாவட்ட செயலாளர் இல்லாத நிலையில் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்ட மூன்று பெண்கள் மாவட்ட செயலாளர்கள் லிஸ்ட்டில் உள்ளதாக தெரிகிறது.

மாற்றம்:

தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு மாநில பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது அவ்வகையில் தேனி மாவட்டத்திலுள்ள மற்றொரு மாவட்ட செயலாளரான தங்கம் தமிழ்செல்வன் தலைமையில் நேரடி தொடர்பில் இருப்பதால் தெற்கு மாவட்டத்தில் புதியருக்கு வாய்ப்ப்பு வழங்கப்படவுள்ளது. அதே போல் அமைச்சர் முத்துச்சாமி, எ.வ.வேலுவிற்கு மாநில அளவிலான பதவிகள் வழங்கப்பட்டு மாவட்ட செயலாளர் பதவி புதியவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. கே.கே.எஸ்.எஸ்.ஆரின் மாவட்ட செயலாளர் பதவி இழுபறியில் உள்ளதாகவும் தெரிகிறது. முன்னாள் தென்காசி எம்.பி தனுஷ் குமார் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  சென்னையில் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் பெயரும் அடிபடுகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் புதியவர்கள் களமிறக்கப்படுவதாக தெரிகிறது. 

-மா.நிருபன் சக்கரவர்த்தி