மைக் டைசன்- ஜேக்பால் மோதும் குத்துச்சண்டை போட்டி.. வெல்லப்போவது யார்..?

முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியன் மைக் டைசன் மற்றும் யூடியூபரும், தொழில்முறை குத்துச்சண்டை வீரருமான ஜேக் பால் இடையிலான போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

Nov 16, 2024 - 04:06
Nov 16, 2024 - 04:37
 0
மைக் டைசன்- ஜேக்பால் மோதும் குத்துச்சண்டை போட்டி..  வெல்லப்போவது யார்..?
மைக் டைசன்- ஜேக்பால் மோதும் குத்துச்சண்டை போட்டி.. வெல்லப்போவது யார்..?

அமெரிக்காவில் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வரும் நிலையில், மைக் டைசன் மற்றும் ஜேக்பால் இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் உலக ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசன் (58), யூடியூபர் ஜேக்பால் (27) மோதும் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி இன்று இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில் ஆர்லிங்டன் ‘ஏடி அண்ட் டி’ விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. மைக் டைசன் இதுவரை தனது குத்துச் சண்டை வரலாற்றில் 58 போட்டியில் விளையாடி 50 போட்டியில் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் ‘நாக்-அவுட்’ முறையில் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபரான ஜேக்பால் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். அவர் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில், 10-ல் வெற்றி பெற்ற நிலையில், அதில் 7 போட்டிகளில் முறை ‘நாக்-அவுட்’ வெற்றி பெற்றுள்ளார்.

இதை முன்னிட்டு நடைபெற்ற இறுதி ஃபேஸ்-ஆஃப் சந்திப்பில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது பாலை வலது கன்னத்தின் பக்கம் டைசன் அறைந்தார். இது சமூக வலைதளத்தில் வைரலானது. நிச்சயம் இதற்கு ரிங்கில் பதிலடி கொடுப்பேன் என ஜேக் பால் சூளுரைத்துள்ளார். அது தனது கன்னத்தை கிள்ளியது போன்ற உணர்வை தந்ததாகவும் அவர் தெரிவித்தார். ‘இந்தப் போட்டியில் டைசனை நாக்-அவுட் செய்வேன்’ என்று அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், மைக் டைசன் மற்றும் ஜேக் பால் இடையிலான குத்துச்சண்டை போட்டியை நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்தில் நேரலையில் ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow