PM Modi Tour : மகாராஷ்டிரா சுற்றுப்பயணம்... வாதவான் துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

PM Modi Lays Foundation Stone for Vadhavan Port Project : மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்புள்ள வாதவான் துறைமுக திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 30) நாட்டுகிறார்.

Aug 30, 2024 - 08:20
Aug 30, 2024 - 16:47
 0
PM Modi Tour : மகாராஷ்டிரா சுற்றுப்பயணம்... வாதவான் துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி
வாதவான் துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

PM Modi Lays Foundation Stone for Vadhavan Port Project : பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 30) மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் இன்று மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள குளோபல் பிண்டெக் பெஸ்ட் 2024 நிகழ்ச்சியில் காலை 11 மணி அளவில் உரையாற்றவுள்ளார். 

இதையடுத்து மதியம் 1:30 மணி அளவில் பால்கரில் உள்ள சிட்கோ மைதானத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இதைத்தொடர்ந்து பால்கரில் சுமார் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்புள்ள வாதவான் துறைமுக திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். 

பால்கர் மாவட்டத்தில் தஹானு நகருக்கு அருகில் அமைந்துள்ளது தான் வாதவான் துறைமுகம், இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் இதுவும் ஒன்றாகவும். சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு நேரடி இணைப்பை வழங்கும் ஒரு முக்கிய இடம். போக்குவரத்து நேரங்களையும், செலவுகளையும் குறைக்க இது நமது தேசத்திற்கு பெரிதும் உதவும். 

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த துறைமுகம் ஆழமான பெர்த்கள், திறமையான சரக்கு கையாளும் வசதிகள் மற்றும் நவீன துறைமுக மேலாண்மை அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதுமட்டுமல்ல இந்த புதிய துறைமுகமானது குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிரதமரின் இந்த மகாராஷ்டிரா வருகையின் போது, நாடு முழுவதும் இத்துறையின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில், சுமார் ரூ.1,560 கோடி மதிப்பிலான 218 மீன்பிடித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

மீன்பிடித் துறைமுகங்களின் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல், மீன் இறங்குதுறை மையங்கள் மற்றும் மீன் சந்தைகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட முக்கியமான மீன்பிடி உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இது மீன் மற்றும் கடல் உணவுகளின் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கு தேவையான வசதிகள் மற்றும் சுகாதாரமான நிலைமைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow