Kamal Haasan Speech At Makkal Needhi Maiam General Meeting : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தேசிய வளர்ச்சிக்காக வரி செலுத்துவதில் மாநிலங்களின் பங்குக்கு முக்கியத்துவம் அளிப்பது, தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வை மத்திய அரசு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டது.
வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு 50 சதவீத லாபத்தை கொடுக்கும் வகையில் குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக மீனவர்கள் 5 பேர் மொட்டையடித்து கொடுமைப்படுத்தியது தொடர்பாக இலங்கை அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கேளிக்கூத்தானது. ஒரே நாடு ஒரே தேர்தலை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது என்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அழகான மாளிகை இடித்து விட்டு குட்டி சுவராக மாற்றும் செயலாகும். மக்கள் நலனுக்கு எதிரானது, மாநில கட்சிகளுக்கு இல்லாமல் மாற்றும் செயலாகும். பன்முக தன்மையுள்ள இந்தியாவில் இதனை கொண்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை சீரமைக்கவும், உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மேலும், தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறைப்பது பெரும் அநீதியாகும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இளைஞர்கள் தேர்தலில் அதிகம் பங்கேற்பதை வலியுறுத்தும் வகையில் தேர்தலில் போட்டியிடும் வயதை 25 வயதில் இருந்து 21 வயதாக குறைக்க வேண்டும். இதனை ஒன்றிய அரசு திருத்தம் செய்ய வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் பொதுக்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், மக்களவைக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதன்பிறகு 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முடிவுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதே சமயம், இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள், தொடர்ந்து விமர்சித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன. இந்நிலையில், கமல்ஹாசன் ஒரே ஒரே தேர்தல் முடிவுக்கு கமல்ஹாசன்(Kamal Haasan) எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.