இந்திய கேப்டனுக்கு ஆண்குழந்தை... குட்டி ஹிட்மேனை வரவேற்று ரசிகர்கள் வாழ்த்து..!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார். ரோகித் - ரித்திகா தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ரோகித் - ரித்திகா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ரோகித்-ரித்திகா தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளை பார்ப்பதற்கு மைதானத்திற்கு செல்வது வழக்கம். ரோகித் எந்த மைதானத்தில் விளையாடினாலும், அங்கு ரித்திகா மற்றும் ரோகித்தின் மகள் சமைரா உடனிருப்பர். ஆனால், ரித்திகா கடந்த சில மாதங்களாக எந்த கிரிக்கெட் போட்டி தொடரையும் காண ரோகித்துடன் மைதானத்திற்கு செல்லவில்லை. சமீபத்தில் நடைபெற்ற மும்பை டெஸ்ட் போட்டியின் போட்டியின் போது ரித்திகா கர்ப்பமாக இருப்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. அப்போது முதல் ரோகித்- ரித்திகா தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வந்தது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ரோகித் சர்மா தன் மனைவியின் பிரசவத்தின் போது உடனிருக்க வேண்டும் என்பதால், இந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர்களுக்கு நேற்று (நவ.15) ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண்குழந்தை பிறந்த தகவல் ரோஹித் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் பங்கேற்பாரா? - ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் ரோஹித் பங்கேற்பாரா அல்லது குடும்பத்துடன் நேரம் செலவிட உள்ளாரா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அவர் இந்தப் போட்டியில் விளையாடாத பட்சத்தில் பும்ரா அணியை வழிநடத்துவார். தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் உடன் கில், கே.எல்.ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய மூவரில் ஒருவர் விளையாட வாய்ப்புள்ளது.
What's Your Reaction?