டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்தெந்த அணிகள் மோதப்போகிறது என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
இந்தியா:
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து, இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 98 புள்ளிகள் [வெற்றி சராசரி - 74.24] பெற்று இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 8 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் பெற்றுள்ளதோடு, ஒன்றில் டிரா செய்துள்ளது.
இந்திய அணி இன்னும் 8 போட்டிகளில் [நியூசிலாந்து அணிக்கு எதிராக 3, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5] விளையாடவுள்ளது. இந்த 8 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றால், 85.09 வெற்றி சராசரியுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும். அதே சமயம் இறுதிப்போட்டிக்குள் நுழைய வேண்டுமானால், குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வென்று, இரண்டு போட்டிகளை டிரா செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலியா:
இந்திய அணியை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 90 புள்ளிகளுடன் [வெற்றி சராசரி - 62.50] இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 8 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளதோடு, ஒன்றில் டிரா செய்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியை 76.32 வெற்றி சதவீதத்தை பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைய வேண்டுமானால், மீதமுள்ள 7 டெஸ்ட் போட்டிகளிலும் வெல்ல வேண்டும். ஆஸ்திரேலியா இந்தியாவுடன் 5 போட்டிகளிலும், இலங்கையுடன் 2 போட்டிகளிலும் விளையாட உள்ளதால் அதற்கு சாத்தியம் உள்ளதாக தெரியவில்லை. குறைந்தபட்சம் 5 போட்டிகளில் வென்றால், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளின் வெற்றி தோல்வியை சாந்திருக்க நேரிடும்.
இலங்கை:
இலங்கை அணி 60 புள்ளிகளுடன் [வெற்றி சராசரி - 55.56] மூன்றாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 5 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் பெற்றுள்ளது. இலங்கை அணிக்கு இன்னும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இங்கிலாந்து எதிராக 2 போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டியிலும் விளையாடுகிறது. இந்த நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றால், 48 புள்ளிகள் பெறுவதோடு, வெற்றி சராசரி 69.23ஆக உயர்ந்து முதல் இரண்டு இடத்தை பிடிக்கும். இதில் ஒன்றில் தோல்வி அடைந்தாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை சார்ந்திருக்க வேண்டிவரும்.
இங்கிலாந்து:
இலங்கை அணியை தொடர்ந்து நான்காவது இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இங்கிலாந்து அணி 81 புள்ளிகள் பெற்றிருந்தாலும், வெற்றி சராசரி 42.19-ஐ மட்டும் கொண்டுள்ளது. 16 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 8 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் பெற்றுள்ளது. ஒரு போட்டியில் டிரா ஆகியுள்ளது.
ஆனாலும், ஏறக்குறைய சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேறும் நிலையிலேயே, இங்கிலாந்து அணி உள்ளது. இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவினால், மற்ற அணிகளின் கடைக்கண் பார்வையால் வேண்டுமானால் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.