3 சதங்கள் விளாசிய இங்கிலாந்து.. 75 ரன்களை தாண்டாத இலங்கை பரிதாப தோல்வி..

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.

Sep 2, 2024 - 09:18
Sep 2, 2024 - 18:03
 0
3 சதங்கள் விளாசிய இங்கிலாந்து.. 75 ரன்களை தாண்டாத இலங்கை பரிதாப தோல்வி..
உற்சாகத்தில் இங்கிலாந்து வீரர்கள்

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி லார்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங் தேர்வு செய்ததை அடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 427 ரன்கள் குவித்தது. முன்னதாக, அனுபவ வீரர் ஜோ ரூட் 162 பந்துகளில் தனது 33ஆவது சதத்தை கடந்தார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் அலஸ்டைர் குக்-இன் சாதனையை சமன் செய்தார். மேலும், சர்வதேச அளவில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தை பிடித்தார். அதேபோல், ‘பேஸ்பால்’ கிரிக்கெட் ஆடிய அந்த அணியின் ஆல்ரவுண்டர் கஸ் அட்கின்சன் 115 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். இலங்கை தப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 251 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் கமிந்து மெண்டிஸ் அடித்த 74 ரன்களே அதிகப்பட்சமாகும். அவருக்கு அடுத்தபடியாகம் தினேஷ் சண்டிமால் 23 ரன்களும், ஆஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்களும் எடுத்தனர். 6 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 231 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஜோ ரூட் மீண்டும் ஒரு சதம் அடித்து அசத்தினார். ஜோ ரூட் தனது 34ஆவது சதத்தை கடந்து சாதனை படைத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 251 ரன்களுக்கு இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால், இலங்கை அணிக்கு 483 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, தொடர்ந்து மோசமான தொடக்கத்தையே ஏற்படுத்தியது. நிஷன் மதுஷ்கா 13 ரன்களிலும், பதும் நிஷங்கா 14 ரன்களிலும், பிரபாத் ஜெயசூர்யா 4 ரன்களிலும் வெளியேறினார்.

அதிகப்பட்சமாக தினேஷ் சண்டிமால் 58 ரன்களையும், திமுத் கருனரத்னே 55 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 50 ரன்களையும் எடுத்தனர். இதனால், இலங்கை அணி 292 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் ஆட்டமிழந்து, 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில் 3 சதங்கள் அடிக்கப்பட்ட நிலையில், இலங்கை அணி தரப்பில் அதிகப்பட்சமாக 74 ரன்களே எடுக்கப்பட்டது.

இதனால், இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அட்டகாசமாக பந்துவீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசியதோடு, 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை அட்கின்சன் படைத்தார். மேலும், ஆட்டநாயகன் விருதினையும் அவர் பெற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow