Indian Team Bowling Coach : இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்.. கம்பீரின் நெருங்கிய நண்பர்!

Indian Team Bowling Coach Morne Morkel : அதிவேக பந்துவீச்சின் மூலம் சச்சின், சேவாக் போன்ற தரம்வாய்ந்த பேட்ஸ்மேன்களை கலங்கடித்த மோர்னே மோர்கல், பல போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளார். இவர் 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 309 விக்கெட்டுகளும், 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 188 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 44 டி20 போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Aug 14, 2024 - 20:51
Aug 15, 2024 - 18:10
 0
Indian Team Bowling Coach : இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்.. கம்பீரின் நெருங்கிய நண்பர்!
Indian Team Bowling Coach Morne Morkel

Indian Team Bowling Coach Morne Morkel : இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிந்து விட்டது. இந்திய வீரர்கள் டி20 உலகக்கோப்பையை வென்று டிராவிட்டை வெற்றியுடன் வழியனுப்பி வைத்தனர். 

இதனால் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்த நிலையில், முன்னாள் வீரர் கெளதம் கம்பீர், இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து கெளதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். 

பின்னர் கம்பீரின் நெருங்கிய நண்பரும், கொல்கத்தா அணியில் அவருடன் இணைந்து பணியாற்றியவருமான அபிஷேக் நாயர் துணை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல்(Morne Morkel) நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்திய அணியில் தனது பணியை தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 39 வயதான மோர்னே மோர்கல்(Morne Morkel) தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக சிறந்து விளங்கியவர்.

தனது அதிவேக பந்துவீச்சின் மூலம் சச்சின், சேவாக் போன்ற தரம்வாய்ந்த பேட்ஸ்மேன்களை கலங்கடித்த மோர்னே மோர்கல்(Morne Morkel), பல போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளார். இவர் 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 309 விக்கெட்டுகளும், 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 188 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 44 டி20 போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் உள்ளிட்ட அணிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் மோர்னே மோர்கல்(Morne Morkel) பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பணியாற்றினார். ஆனால் பின்பு தனது பதவிக்காலம் முடிவடையும் முன்பே அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர், ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, மோர்னே மோர்கல்(Morne Morkel) அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டார். கெளதம் கம்பீரின் நெருங்கிய நண்பராக இருந்த மோர்னே மோர்கலுக்கு(Morne Morkel) தற்போது இந்திய அணியில் பதவி கிடைத்துள்ளது. மோர்னே மோர்கலை பவுலிங் பயிற்சியாளராக(Bowling Coach Morne Morkel) நியமிக்கும்படி பிசிசிஐக்கு  கம்பீர் நிபந்தனை விதித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow