“இது கூட்டுறவு வார விழா அல்ல நமது குடும்ப விழா” - செந்தில் பாலாஜி உற்சாகம்

மாவட்டங்கள் தோறும் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளுக்குமான வளர்ச்சி! என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

Nov 17, 2024 - 05:59
Nov 17, 2024 - 06:01
 0
“இது கூட்டுறவு வார விழா அல்ல நமது குடும்ப விழா” - செந்தில் பாலாஜி உற்சாகம்
“இது கூட்டுறவு வார விழா மட்டுமல்ல நமது குடும்ப விழா” - செந்தில் பாலாஜி உற்சாகம்

கரூரில் உள்ள தனியார் அட்லஸ் கலையரங்கம் திருமண மண்டபத்தில் 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார மாவட்ட அளவிலான விழா இன்று (நவ. 16) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்திருவைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “திமுக ஆட்சியில் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், மத்தியக்காலக் கடன், சுய உதவிக்குழு கடன், டாப்செட்கோ, இதர கடன்கள், டாம்கோ என 3,558 பயனாளிகள் 37 கோடியே ஒரு லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை பெற்றுள்ளனர். இது கூட்டுறவு வார விழா மட்டுமல்ல நமது குடும்ப விழா.

கரூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு முதல்வர் மூன்று கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களை வழங்கி உள்ளார். ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இதன் மூலமாக பயிற்சி பெற்று வருகின்றனர். விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான இடத்தை தேர்வு செய்து புதிய இடத்தில் தொடங்கி சிறப்பான வளர்ச்சியை அடையக்கூடிய ஏற்பாட்டை செய்ய இருக்கிறோம். பொது விநியோகத் திட்டம் மூலமாக கரூர் மாவட்டத்தில் 39 புதிய பகுதி நேர நியாய விலை கடைகள் 500 புதிய ரேசன் அட்டை அதிகமாக உள்ள 16 பகுதி நேர கடைகள் முழு நேரக் கடைகளாக மாற்றப்பட்டு 25 புதிய நியாய விலை கடைகளுக்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் தோறும் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளுக்குமான வளர்ச்சி! ஒவ்வொரு துறைகளுக்கும் வளர்ச்சி என்பது தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறைகளும் பெரும் வளர்ச்சி என்பதை முதலமைச்சர் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருப்பூரில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பேசிய அமைச்சர் மு. பெ. சாமிநாதன், கூட்டுறவு வார விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் இந்த கூட்டுறவு வார விழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர் ஆர் என் ரவி இந்தியாவை பாரத் என்று அழைக்க வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு, அவர் பாஜகவின் ஓர் தலைவர்தான் என்றும் ஏதாவது முரண்பாடான விஷயங்களை கூறி அவர் பெயர் பெற வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார் என்றும் திமுக இந்தியா என்றுதான் குறிப்பிடும் என்று கூறினார். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு கொண்டிருப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்தந்த மாவட்ட காவல் துறை மூலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது யார் வேண்டுமானாலும் தேவையே இல்லாமல் வழக்கு தொடரலாம், ஆனால் நிரூபிக்க வேண்டுமே” என்றும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow