செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்று சாதனை.. டீம் இந்தியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய செஸ் வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sep 22, 2024 - 21:36
 0
செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்று சாதனை.. டீம் இந்தியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
டீம் இந்தியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெற்று வந்தது. 193 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் ஓபன் பிரிவில் இந்திய ஆடவர் அணி தொடர்ச்சியாக 8 சுற்றுகளில் வெற்றி பெற்று அசத்தி வந்தது. 9வது சுற்று டிராவில் முடிந்த நிலையில், 10வது சுற்று முடிவில் 2.5-1.5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 19 புள்ளிகளுடன் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. 

இந்நிலையில், இறுதிச் சுற்றுக்கானப் போட்டியில் ஸ்லோவேனியா அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் குகேஷ், அர்ஜுன் ஆகியோர் விளையாடினர். இதில் குகேஷ், அமெரிக்க வீராங்கணை ஃபேபியானோ கருவானாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்து அபார வெற்றிப் பெற்றார். இதன் காரணமாக இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. 

இன்று (செப்டம்பர் 22) நடைபெற்ற இறுதிச் சுற்றுக்கானப் போட்டியில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரானப் போட்டியில் ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்திய அணி சமன் செய்த நிலையில், புள்ளிகள் அடிப்படையில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்றனர்.

கடந்த முறை சென்னையில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசிம் விதித், பெண்டாலா ஆகிய இந்திய வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தளத்தில் அவர், “இந்தியா தொடர்ந்து உயர்ந்து பிரகாசிக்கிறது! சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடத்துவதில் இருந்து 45வது FIDE செஸ்ஒலிம்பியாட் புடாபெஸ்ட் 2024ல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வெல்வது வரை, என்ன ஒரு அற்புதமான பயணம்! 

மேலும் படிக்க: இலங்கையின் 9வது அதிபராகும் அநுர குமார திசநாயக... புதிய வரலாற்று சாதனை!

நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த வரலாற்று சாதனையை படைத்திருக்கும் டீம் இந்தியாவிற்கு எனது வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow