பார்டர் கவாஸ்கர் தொடர்.. ரவிசாஸ்திரியின் கனவு அணி..!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது கணிக்கப்பட்ட அணியை அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் அவருக்கு பதிலாக துவக்க ஆட்டக்காரராக கே.எல் ராகுல் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக கவுதம் கம்பீர் கூறியிருந்தார்.
இந்த கருத்திற்கு மாற்றாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ராகுலுக்கு பதில், சுப்மன்கில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை ஸ்பின்னராக இந்தியா தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என விருப்பம் தெரிவித்துள்ளார் . இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காபா டெஸ்ட் போட்டியில் சுப்மன்கில் துவக்க வீரராக விளையாடி 90 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அது தேர்வாளர்களுக்கு மிகவும் கடினமான தேர்வாக இருக்கும். அங்கே நீங்கள் சுப்மன் கில்லை துவக்க ஆட்டக்காரராக விளையாட அனுப்பலாம். ஏனெனில் ஏற்கனவே அவர் ஆஸ்திரேலியாவில் துவக்க வீரராக விளையாடியுள்ளார்.
நான் ஒரு ஸ்பின்னரை மட்டும் தேர்ந்தெடுப்பேன். கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக பெர்த் நகரில் ஆஸ்திரேலியா விளையாடிய போட்டியில் தானும் இருந்ததாகவும், இது போன்ற சூழலில் 2 ஸ்பின்னர்கள் இந்திய அணிக்கு முக்கிம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சியாளராக நான் எப்போதும் வீரர்களின் ஃபுட் ஒர்க்கை பார்ப்பேன். சில நேரங்களில் ரன்கள் முக்கியமல்ல. ஆனால் உங்களுடைய வீரரின் கால்கள் நன்றாக நகர்ந்தால் சூழ்நிலையை புரிந்து விளையாடுகிறார் என்பது அர்த்தம்”
ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோரை தனது அணியில் இணைத்துள்ளார்.
What's Your Reaction?