விளையாட்டு

Duleep Trophy 2024 : 'துலீப் டிராபி' தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள்.. ஸ்டார் பிளேயர்ஸ் யார்? யார்?

BCCI Announced Indian Players in Duleep Trophy 2024 : இந்தியாவில் ரஞ்சி கோப்பை, துலீப் டிராபி உள்ளிட்ட பல்வேறு முதல் தர கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடத்தப்படுகின்றன. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு முதல் தர போட்டிகளில் அசத்திய வீரர்கள்தான் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஐபிஎல் அறிமுகம் செய்யப்பட்டதும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் குறைந்தது.

Duleep Trophy 2024 : 'துலீப் டிராபி' தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள்.. ஸ்டார் பிளேயர்ஸ் யார்? யார்?
BCCI Announced Indian Players in Duleep Trophy 2024

BCCI Announced Indian Players in Duleep Trophy 2024 : இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி தொடரான 'துலீப் டிராபி' தொடர் செப்டம்பர் 5ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற உள்ள 'துலீப் டிராபி' தொடருக்கான அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

மொத்தம் 4 அணிகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ அணிக்கு இந்திய அணியில் விளையாடும் சர்வதேச வீரர் சுப்மன் கில்லும், சி அணிக்கு ருத்ராஜ் கெய்க்வாட்டும், டி அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சர்வதேச வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ், முகமது சிராஜ், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பல்வேறு இந்திய அணி வீரர்கள் 'துலீப் டிராபி' தொடருக்கான அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.

அதாவது இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஐஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் துலீப் டிராபி தொடரில் விளையாட உள்ளனர். 'துலீப் டிராபி' தொடருக்கான அணி வீரர்கள் பின்வருமாறு:-

ஏ அணி: 

சுப்மன் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், கே.எல். ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா மற்றும் ஷஸ்வத் ராவத்.  

பி அணி:

அபிமன்யூ ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ப்ராஸ் கான், ரிஷப் பண்ட், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், யாஷ் தயால், முகேஷ் குமார், ராகுல் சாஹர், சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி மற்றும் ஜெகதீசன்.

சி  அணி:

ருத்ராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல், சூர்யகுமார் யாதவ், பி.இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், உம்ரான் மாலிக், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே மற்றும் சந்தீப் வாரியர். 

டி அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா தைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன், ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கேஎஸ் பரத் மற்றும் சௌரப் குமார்.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை, துலீப் டிராபி உள்ளிட்ட பல்வேறு முதல் தர கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடத்தப்படுகின்றன. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு முதல் தர போட்டிகளில் அசத்திய வீரர்கள்தான்  இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஐபிஎல் அறிமுகம் செய்யப்பட்டதும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் குறைந்தது.

ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த வீரர்கள் நேரடியாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதால், தேசிய அணியில் இடம்பிடித்த பலரும்  முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் எஸ்கேப் ஆகி வந்தனர். அண்மையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடாத இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும் ரஞ்சி கோப்பை, துலீப் டிராபி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.