விளையாட்டு

ICC Women's T20 World Cup 2024 : மகளிர் உலகக்கோப்பை 2024: இந்திய அணியில் இடம்பிடித்த வீராங்கனைகள் பட்டியல்...

BCCI Announced India Squad for ICC Women's T20 World Cup 2024 : 2024ஆம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ICC Women's T20 World Cup 2024 : மகளிர் உலகக்கோப்பை 2024: இந்திய அணியில் இடம்பிடித்த வீராங்கனைகள் பட்டியல்...
BCCI Announced India Squad for ICC Women's T20 World Cup 2024

BCCI Announced India Squad for ICC Womens T20 World Cup 2024 : மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 தொடர் வருகின்ற அக்டோபர் மாதம் 3ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலில் வங்கதேசத்தில் நடைபெறுவதாக இருந்த, உலகக்கோப்பை தொடரானது, அங்கு நடைபெற்ற போராட்டங்கள் காரணமாக ஐக்கிய அரபு எமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

இதில், இடம்பெற்றுள்ள 10 அணிகள், ஐந்தைந்து அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதவுள்ளன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெறும். பயிற்சிப் போட்டிகள் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும், 15 கொண்ட இந்திய வீராங்கனைகள் பட்டியலை, இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் தலைமை தாங்க உள்ளார்.

இந்திய வீராங்கனைகள் பட்டியல்:

ஹர்மன்பிரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா (து.கே), ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிஜியஸ், ரிச்சா கோஷ் (வி.கீ.), யஷ்திகா பாட்டியா (வி.கீ)*, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாகூர், தயாளன் ஹேமலதா, ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டில்*, சஜனா சஜீவன்,

*குறியிட்ட வீராங்களின் உடற்தகுதியை பொறுத்து இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.