K U M U D A M   N E W S

Author : Janani

LIVE : CM Stalin : ”எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” - அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் பேட்டி

CM MK Stalin Return To Chennai : முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய முதலமைச்சருக்கு அமைச்சர்கள், திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

l.N.D.I.A கூட்டணி பொய்ப்பிரசாரம் - வானதி சீனிவாசன்

அன்னபூர்ணா உணவக உரிமையாளர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் பொய்ப்பிரசாரம் செய்வதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

LIVE : CM Stalin Arrived in Chennai : சென்னை வந்தடைந்த முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

CM Stalin Arrived in Chennai : முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு அரசுப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். அமெரிக்க பயணத்தின் போது 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

JUST IN | Vellore Road Accident : சாலை விபத்து - 15 பேர் படுகாயம்

Vellore Road Accident News Update : வேலூரில் சொகுசு கார், கண்டெய்னர் லாரி, அரசுப் பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து - 15 பேர் படுகாயம். பூனை குறுக்கே வந்ததால் மோதாமல் இருக்க, காரை திருப்ப முயன்ற போது லாரி மீது கார் மோதி விபத்து

Chennai Metro Rail Project : சென்னை மெட்ரோ 2 திட்டம் - நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு

Minister Thangam Thenarasu About Chennai Metro Rail Project: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு இதுவரை 11 ஆயிரத்து 762 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

Formula 4 Car Race : கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் - உதயநிதி ஸ்டாலின்

Minister Udhayanidhis Stalin About Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Mariyappan Thangavelu : பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் அடித்த மாரியப்பன்..அமைச்சர் உதயநிதி வாழ்த்து

Minister Udhayanidhi Stalin Met with Mariyappan Thangavelu : பாராலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கத்தை வென்ற மாரியப்பன் தங்கவேலு சென்னை திரும்பிய நிலையில் அமைச்சர் உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

CM Stalin America Tour : முதலமைச்சரின் முதலீடு ஈர்க்கும் பயணம்.., காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

Congress MP Manickam Tagore on CM Stalin America Tour : முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில், தென் மாவட்டங்களை புறக்கணிக்காமல் தொழில் வளர்ச்சிகளை பெற்றுத் தர வேண்டும் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

CM MK Stalin Return To Chennai : சென்னை திரும்பும் முதலமைச்சர்..வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரம்

CM MK Stalin Return To Chennai : அமெரிக்க பயணத்தை நிறைவு செய்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்புகிறார்

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 14-09-2024

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 14-09-2024

#BREAKING | திமுக பவளவிழா - முதலமைச்சர் அழைப்பு

திமுகவின் பவள விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது - முதலமைச்சர்

#breaking | அமலாக்கத்துறை சோதனை - 4 இளைஞர்கள் கைது

திருவள்ளூர் - பள்ளிப்பட்டு அருகே அதிகளவில் பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக 4 இளைஞர்களைஅமலாக்கத்துறை கைது செய்தது. பணப்பரிவர்த்தனை தொடர்பாக 4 இளைஞர்களிடமும் 19 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

#BREAKING || தீ விபத்தில் சிக்கிய யானை உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 13-09-2024

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 13-09-2024

மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து.. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை

மதுரை: மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து. படுகாயம் அடைந்த 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை

குரங்கு அம்மைக்கான சித்த மருத்துவ சிகிச்சைகள் - சித்த மருத்துவர் செல்வ சண்முகம்

குரங்கு அம்மைக்கான சித்த மருத்துவ சிகிச்சைகள் - சித்த மருத்துவர் செல்வ சண்முகம்

Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. நினைவுகளை பகிர்ந்த EVKS இளங்கோவன்

Sitaram Yechury Passed Away : உடல் நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு EVKS இளங்கோவன் இரங்கல் தெரிவித்துள்ளார் 

VIDEO : Car Bus Accident : தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Car Bus Accident in Kerala's Kozhikode : கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியானது. விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

#BREAKING : Dengue Fever Death in Tamil Nadu : டெங்குவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

Dengue Fever Death in Tamil Nadu : நடப்பாண்டில் மட்டும் ஏற்கனவே 4 பேர் டெங்குவால் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்குவால் செங்கல்பட்டை சேர்ந்த 37 வயதான நபர் உயிரிழப்பு

Ayushman Bharat Yojana : 70 வயதை தாண்டிய அனைவருக்கும் மருத்துவ காப்பீடு!

Ayushman Bharat Yojana Scheme Update in Tamil : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். தலா ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை - 6 கோடி மூத்தகுடிமக்கள் பயனடைவர் என அறிவிப்பு

நடுக்கடலில் நேர்ந்த கொடூரம் - வெளியானது திடுக்கிடும் வீடியோ

நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Bun-க்கு No GST.. க்ரீமுக்கு 18% GST - நிதியமைச்சர் கொடுத்த ரியாக்ஷன் இருக்கே..!!

கோவையில் தொழில்துறையினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் புலம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

BREAKING NEWS : கோயில் முன்பு காவலர் அநாகரீக செயல் - வைரல் வீடியோ

விருத்தாச்சலம் தலைமை காவலர் பாக்யராஜ் மது போதையில் கோயில் முன்பு அநாகரீக செயலில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு. வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ரோந்து பணியில் ஈடுபடாமல் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது

BREAKING NEWS : திருப்பூருக்கு அழைத்து செல்லப்படும் மகாவிஷ்ணு

3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூருக்கு அழைத்து சென்றுள்ளனர். பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்தில் வைத்து மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர்

#JUSTIN || பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு - பயணிகள் காத்திருப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம். சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் குவிந்த பொதுமக்கள்