#BREAKING: கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு
ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து மீட்பு பணி குறித்து அறிவுரைகள் வழங்கினார்
ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து மீட்பு பணி குறித்து அறிவுரைகள் வழங்கினார்
அக். 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
எவ்வளவு பெரிய மழை வந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளது - T. M. Anbarasan
வெறும் அறிக்கையை வைத்து கொண்டு பேரிடரை எதிர்கொள்ள முடியாது - RB Udhayakumar Speech
சென்னையில் தொடரும் கனமழையால் தரமணியில் இருந்து பெருங்குடி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது
கனமழை காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்தி சேவைகளும் செல்ல முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு
தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு
சென்னை தியாகராய நகர் பர்கித் சாலையில் கனமழையால் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 250 கனஅடியில் இருந்து 260 கனஅடியாக உயர்வு
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது
சென்னை விமான நிலையம் - சென்ட்ரல் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்; மற்ற வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதால் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிக ரத்து
மழையின் போது உதவி தேவைப்படுவோர்களுக்காக சென்னை மாநகர காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு
சென்னையில் தொடர் கனமழை காரணமாக வரத்து குறைவால் காய்கறி தட்டுப்பாடு
ரயில் புறப்பாடு மற்றும் வருகை குறித்து அறிந்துகொள்ள தெற்கு ரயில்வே உதவி எண்கள் அறிவிப்பு
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள்... அபராதம் விதிப்பு? – காவல்துறை விளக்கம்
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்பனை
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
கனமழை காரணமாக கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம். இன்று முதல் 3 நாளைக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்
கோவை மாவட்டத்தில் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டுமே செயல்படும் - ஆட்சியர் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கையால் கடலூரில் உள்ள அண்ணாமலை பல்கலை.யின் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு; தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - அண்ணாமலை பல்கலைக்கழகம்
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 14-10-2024
சேலம் - பனமரத்துப்பட்டி அருகே சிறார்கள் அக்கா, தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது