முதலமைச்சர் விஜயின் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்யவந்த நிறுவனங்கள் மீதும், அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மை மீதும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னை கிண்டியில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், பல்வேறு துறைச் செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஜப்பான், ஜெர்மனி, ஃப்ரான்ஸ், தென் கொரியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஸ்வீடன், தைவான், டென்மார்க் மற்றும் இத்தாலி உள்ளிட்ட மொத்தமாக 16 நாடுகளில் இருந்து முதலீடு செய்ய நிறுவனங்கள் வந்தன. இந்த மாநாட்டின் மூலம் மொத்தமாக 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, இவர்கள் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களின் நம்பகதன்மை பேசும்பொருளாகியது. எப்படியென்றால், கடந்த பிப்ரவரியில் ரூ.1 லட்சம் நிகர சொத்து மதிப்புடன் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10 ஆயிரம் கோடி முதலீடுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறதாம்.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு வெறும் ஆறரை கோடி (6.5 crore) மட்டுமே வருவாய் காட்டிய ஒரு நிறுவனம், முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1000 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாம்.
இதைவிட, பெரும் சோகமாய் ஒரு நிறுவனம் 154 கோடி நஷ்டம் காட்டிய ஒரு கம்பெனி 800 கோடிக்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும்,
மேலும், என்னென்ன நிறுவனங்கள் ஒப்பந்தமாகியுள்ளன என்று பார்க்கும்போது, சில நிறுவனங்கள் எல்லாம் தொடங்கியே சில மாதங்கள் ஆனவை என்பதெல்லாம் ஆச்சர்யப்படுத்துகிறது. அதைக்கூட விட்டுவிடலாம், ஒப்பந்தமாகியுள்ள பல நிறுவனங்கள் பற்றிய விவரங்களே கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இவை அனைத்தையும் பார்க்கும்பொழுது, "அது எப்படி திமிங்கலம்" என்று கேட்க தோணுகிறது என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களில் பெரிய நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டால் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்(Skyroot Aerospace), அக்னிகுல் காஸ்மோஸ்(Agnikul Cosmos), அல்ட்ராவயலட்(Ultraviolette), சூப்பர் மைக்ரோ(Super Micro), மற்றும் YKK என்னும் ஜப்பான் நிறுவனம் போன்றவைதான் என தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
இதைத்தாண்டி, தூத்துக்குடியில் விண்வெளி மையம் அமைப்பது, கிருஷ்ணகிரியில் மின்சார வாகனத்திற்கு ஆலை அமைப்பது மற்றும் திருவள்ளூரில் ஜப்பானிய நிறுவனத்தின் ஐடி ஹார்டுவேர் அமைப்பது என பலதுறைகளில் வேலைவாய்ப்பை பெருக்கலாம் என அரசு கூறினாலும், இவை அனைத்தும் கண்துடைப்புதான் என நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளங்களில் காட்டம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், டி.ஆர்.பி.ராஜா இந்த மாநாட்டில் greenfield, brownfield போன்ற நிறுவனங்கள் தங்களது ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம்என்றும், மொத்தமாக 75 சதவீத முதலீடுகள் திமுக ஆட்சியில் செய்தவை, அவை அனைத்தையும் த.வெ.க. புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் விமர்சிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆட்சியில் பலதுறைகளில் நடந்த ஊழல் குறித்தான அறிக்கைகளின் ஃபைல்கள் எனது மேஜையில் உள்ளது என குறிப்பிட்ட விஜய், அவர் கலந்து கொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டிலேயே இத்தனை சர்ச்சைகளும், ஓட்டைகளும் உள்ளதாகவும், இந்த விவகாரங்கள் அவரது கண்களுக்கு புலப்படுமா என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.