தமிழ்நாடு

ராசிபலன்கள்....இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு தெரியுமா?

By Sumalekha
24 Aug 2026, 06:36 AM
இன்றைய தினம் 12 ராசிகளுக்கான புதிய முயற்சிகள்,பணவரவு மற்றும் செலவுகள், குடும்ப உறவுகள், உடல்நலம்,வியாபாரம் உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு ராசிக்குமான சாதகமான மற்றும் கவனிக்க வேண்டிய அம்சங்களை தெரிந்துகொள்ளலாம்.
மேஷம்:


இன்று காரிய அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு சாதகமான சூழல் அமையும். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் இருக்காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படலாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் சில பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ரிஷபம்:


எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சிலருக்கு பிள்ளைகள் மூலமாகவும் பணவரவு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படலாம். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்றாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம்.

மிதுனம்:


புதிய முயற்சிகளைத் தவிர்த்து, வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மனதில் காரணம் தெரியாத சோர்வு ஏற்படலாம். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உடல்நலனில் அக்கறை தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரம் சுமாராகவே நடைபெறும்.

கடகம்:


தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படலாம். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. சகோதரர்களால் பிரச்னைகள் உருவாகலாம். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத பொருள்சேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பப் பொறுப்புகளை உற்சாகத்துடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:


இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். தொடங்கிய காரியங்கள் சாதகமாக முடியும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கலாம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்திகரமாக இருக்கும்.

கன்னி:


சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், கையில் பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையை கடைப்பிடிக்கவும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்களை அன்புடன் அணுகி வேலை வாங்கவும்.

துலாம்:


உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதைத் தவிர்க்கவும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொண்டாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.

விருச்சிகம்:


பணவரவு கிடைத்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். எதிரிகள் பணிந்து செல்வார்கள். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் பின்னர் விலகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

தனுசு:


புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். சிலருக்கு வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் ஏற்பட்டு மனச்சஞ்சலம் உண்டாகலாம். பொறுமை அவசியம்.

மகரம்:


புதிய முயற்சிகளை பிற்பகலுக்குப் பிறகு தொடங்குவது சாதகமாக இருக்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையாக நடந்துகொள்ளவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகவே இருக்கும்.

கும்பம்:


பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை ஒன்றுக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அக்கம்பக்கத்தினருடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்.

மீனம்:


கணவன்-மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் மேம்படும். காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குப் பிறகு தொடங்குவது நல்லது. இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப்பது உற்சாகம் தரும்.