தமிழ்நாடு

வெளியில போறீங்களா? மறக்காமல் குடை எடுத்துக்கோங்க... மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!

By Bhavani
16 Oct 2026, 11:53 AM
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு திசை காற்று தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் வீதத் தொடங்கியள்ள நிலையில், இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு எங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா,தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா, மாஹே உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பொறுத்தவரைக்கும் சுமார் 1.5 கி,மீ உயரம் வரை தெற்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து ஒடிசா கடலோரப்  பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இன்று 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கரூர், ராமநாதபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.