தமிழ்நாட்டில் தற்போது பல பிரச்னைகளில் முக்கியமான பிரச்னையாக இருந்து வருவது மின்வெட்டு பிரச்னை. இதனால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பலரும் பாதித்து வரும் நிலையில், மக்கள் எல்லோரும் ஆங்காங்கே தெருக்களில் வந்து போராட்டத்தினை நடத்தி வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த மின்வெட்டு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உட்பட கோயம்புத்துர்,திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பற்றாக்குறை காரணமாக இந்த மின் வெட்டு பிரச்னை தொடர்ந்து கொண்டே வருகிறது.
இப்படி பல்வேறு இடங்களில் தொடர்ந்து வரும் மின்வெட்டு நேற்று(12.10.2026) சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தின் முக்கிய கட்டடத்தில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதல் தளத்தில் உள்ள அமைச்சர்கள் அறைகள் என்று சுமார் அரை மணி நேரமாக இருளில் மூழ்கிடந்தன.
இதற்கெல்லாம் தமிழ்நாடு அரசு சார்பில் எந்த வொரு முறையான விளக்கமும் கொடுக்கதாத நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மின் வெட்டு பிரச்னை குறைப்பதற்காக தமிழ்நாடு மின் வாரியம் நேற்று(12.10.26) முதல் வரும் 31 ஆம் தேதி வரை தினசரி 24 மணி நேரமும் 1,500 மெகாவாட் மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 3,000 மெகாவாட் மின்சாரம் வாங்க மின்வாரியம் கடந்த வாரம் டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.
அதன் அடிப்படையில் தற்போது 24 மணி நேரமும் வாங்கப்பட உள்ள மின்சாரத்தை யூனிட் 31.99 ரூபாய் முதல் 34.49 ரூபாய் வரையிலான விலையில் கொள்முதல் செய்வதற்கு ஐந்து நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மாலை முதல் நள்ளிரவு வரை 3,000 மெகாவாட் மின்சாரம் வாங்க டெண்டர் கோரியதில் 2000 மெகாவாட் கிடைத்துள்ளது. மின்சாரம் யூனிட் 33.37 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை வாங்கப்பட உள்ளது. இவ்வளவு அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஒரு யூனிட்டுக்கு 37 ரூபா? என்று அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக,அதிமுக, பாமக, என அனைவரும் மத்தியிலிருந்து கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியாதாவது, மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தனது துறையை தவிர்த்து மற்ற துறைகளுக்கு பதில் அளிப்பார். வெறும் ரீல்ஸை மட்டுமே முன் வைத்து ஆட்சிக்கு வந்த டம்மி முதலமைச்சர். மக்கள் இன்னல்களை பற்றி கவலைப்படவில்லை.
மின்வெட்டுக்கு ப்பியூஸ் கேரியர் திருட்டு என்றார்கள், பின்பு பஞ்சாப் சென்று பாருங்கள் என்றார்கள். தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மின்வெட்டு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுக ஆட்சியின்போது எந்தவித தடையும் இன்றி சீராக மின்விநியோகம் செய்யப்பட்டது. தவெக ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்களாகியும் மின்வெட்டை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரம் கொள்முதல் செய்ய நவம்பர், டிசம்பரிலேயே ஏற்பாடு செய்து டெண்டர் விடுவோம்.
திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் மின் தேவை அதிகரித்துக்கொண்டே வந்தது. 5 ஆண்டுகளில் 4,349 மெகாவாட் மின்சார தேவை அதிகரித்தது. 8,600 மில்லியன் யூனிட் அளவுக்கு உபரியாக இருந்ததை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்தோம். மின்மாற்றிகள் குறைந்த அளவில் பழுதாககூடிய நமது மாநிலத்தில் எப்படி மின்வெட்டு ஏற்படுகிறது.
திமுக ஆட்சியின்போது டான் ஜெட் கோவின் மின் உற்பத்தி 13,000 மெகாவாட் வரை அதிகரிக்கப்பட்டது.ஆந்திராவில் மின்சாரம் கொள்முதல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அதற்குள் நான் செல்லவில்லை.
தமிழ்நாட்டின் சொந்த மின் உற்பத்தியை குறைத்து வெளிச்சந்தையில் கொள்முதல் செய்வதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளார் அமைச்சர் நிர்மல் குமார். வெளிச்சந்தையில் யூனிட்டிற்கு ரூ35-க்கு கொள்முதல் செய்வது, மின்துறையின் ஒட்டுமொத்த நிதிநிலையை சீரழித்துவிடும் திமுக ஆட்சியில் ரூ.20க்கு மின்சாரம் கொள்முதல் செய்ததை விமர்சித்த தவெக ரூ.35க்கு கொள்முதல் செய்கிறது என்று தவெக அரசை செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.